உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

81

பிரதியில் மூலமும் பொழிப்புரையுமே இருந்தன. இருந்தன. முதலில் சில பாடல்களுக்கு மட்டும் விசேட உரை இருந்தது. பிள்ளையவர்கள் பிரதியிலோ முழுவதற்கும் விசேட உரை இருந்தது.1

1

பரிபாடல்: பரிபாடல் எழுபது பாடலையுடையதென்று. தெரிகின்றது.

ஆனால் இப்பாடல்களுள் முதலிலிருந்து தொடர்ச்சி யாகவுள்ள இருபத்திரண்டு பாடல்களும், ...... சில உறுப்புகளுமே சுவடிகளிலிருந்து கிடைத்தன.

இவற்றால் கிடைக்கும் சுவடிகளில் ஒரு நூலுக்குரிய சுவடிகள் ஒரே மாதிரியாக இருப்பது கடினம் என்பதும், முதலான சில நூல்கள்

அனைத்தும்

பரிபாடல்

குறையுள்ளனவாகவே

பதிப்பிக்கப் பெற்றுள்ளன என்பதும் தெளிவாகின்றன.

>

அச்சான சுவடிகளின் பயன் : அச்சான நூல்களின் சுவடி களுள் மூலம் மட்டும் கிடைப்பின் மூல வேறுபாடுகள் திருத்தம் பெறுகின்றன. உரையுடன் கிடைப்பின், மூலபாட வரிகள், உரையில் மீண்டும் எடுத்தாளப்பட்டுள்ள அவ்வரிகள், அவ்வரிகள், உரையின் பொருத்தம் ஆகியவற்றின் துணைகொண்டு பொருத்தமான மூல பாடத்தை உறுதிப்படுத்தலாம்.

புதிய செய்திகள் கிடைத்தல் : அச்சான நூல்களுக்கான சுவடிகளை ஒப்பிட்டதால் "முன்பு உள்ள அச்சுப்படிகளில் காணப் பெறாத அடிகள் பல கிடைத்தன; சில சொற்கள் புலப்பட்டன; சில திருத்தம் பெற்றன. இலக்கணக் குறிப்புகள், பாடினோர் பாடப் பட்டோர் குறிப்புகள் குறிப்புகள் இவற்றில் பல திருத்தங்கள் கிடைத்தன. பல அடிகள் செம்மையாக வரையறை செய்யப்பட்டன.' என்கிறார் சங்க இலக்கியப் பதிப்பாசிரியர்.

தேடத்தூண்டுதல் : எனக்குக கிடைத்த ஏட்டுச் சுவடிகளுள் ஒரு பிரதியின் தொடக்கத்தில் அறநிலை' என்று வரையப் பெற்றிருந்தது. அப்படியே பொருள்நிலை, இன்பநிலை என்ற பகுதிகள் எந்தெந்தப் பாடலிலிருந்து தொடங்குமோ என்று தேடிப் பார்த்தேன்4 என்னும் பதிப்பாசிரியரின் கூற்று, ஒரு சுவடியின்

61. என் சரித்திரம், பக். 736-737.

62. பரிபாடல், முகவுரை.

63. சங்க இலக்கியம், முகவுரை, பக். 17. 64. புறநானூறு, முகவுரை.

Fr U. ——6

?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/97&oldid=1571170" இலிருந்து மீள்விக்கப்பட்டது