உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

சுவடி இயல் ஒரு தொடர், தொடர்ந்து சில தொடர்கள் உள்ளன என்பதை உணரச் செய்து, அவற்றையும் தேடிக் காணும் வாய்ப்பினை அளிக்கிறது என்பதை உணர்த்துகிறது.

திருத்தம் பெறுதல் : உ. வே. சா. அவர்களின் பதிப்பில் வெளி வந்த பாடற் பகுதிகளில் சிதைந்து காணப்படும் அடிகளிற்சில பழைய ஏடுகளுடன் ஒப்பு நோக்கப்பட்டு ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை உரையமைந்த கழகப் பதிப்பு ஓரளவு திருத்தம் பெற் றுள்ளது. புறம்: 328, 328, 337, 355, 357, 361, 362, 366, 370 என்னும் எண்ணுள்ள பாடற்பகுதிகள் இவ்வாறு திருத்தம் பெற்றவையாகும்.

அச்சான நூலில் இல்லாத பல அடிகள் நிரப்பப் பெற்றும், திருத்தம் பெற்றும் உள்ளன என்னும் இச்செய்தி பழைய சுவடி களின் பயனை விளக்குகின்றது. மேலும்,

புறம் 384 ஆம் பாடலில் 'அரிகாற் கருப்பை யலைக்கும் பூழின் என்ற ஐந்தாம் அடியும், 'கரும்பனூரன்' என்ற பத்தாம் அடியின் தொடரும் உ. வே. சா. பதிப்பில் விடுபட்டன. ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை உரையுள்ள கழகப் பதிப்பில் சேர்க்கப் பட்டுள்ளன.

"பதிற்றுப்பத்தின் ஏடுகள் இரண்டு பெற்று அச்சுப்படியையும் அவற்றையும் ஒப்புநோக்குவது முதற்கண் செயற்பாலதென உணர்ந்து செய்ததில் சில வேறுபாடுகளும் சில பாடங்களிற் காணப் பட்ட ஐயங்கட்குத் தெளிவும் கிடைத்தன” என்னும் துரைசாமிப் பிள்ளை அவர்களின் கூற்றும் அச்சான நூல் சுவடிகளின் பயனைத் தெளிவுபடுத்துகிறது.

கிடைக்கும் சுவடிகள் அச்சிடப்பெறாதவை : சுவடிதேடும் முயற்சியின் பயனாக இதுவரை அச்சிடப்பெறாத சுவடிகள் கிடைக்குமாயின் அவற்றை வெளியிட்டுத் தமிழுலகிற்கு அளிக்கும் பேறு பெறுகிறோம். வெளியிடும் நூல் வெளியிடும் நூல் இதுவரை பெயர் கூட அறியாத அளவு புதிய நூலாக அமையலாம். அல்லது பிற நூல் களின் வழியோ பிற உரைகளின் வழியோ அந்நூலின் பெயரும், ஆங்காங்கு சில அடிகளும் தெரிந்துள்ள நூலாகவும் இருக்கலாம். இவையும் முன்கூறிய நிறை, குறைகளை உடையனவாகவே இருக்கும். பலவிடங்களிலிருந்தும் பல படிகள் கிடைக்கக்கூடும்.

65. புறநானூறு, கழகம், அணிந்துரை, பக். 12. 66. பதிற்றுப்பத்து, கழகம், முகவுரை, பக், 13.

}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/98&oldid=1571171" இலிருந்து மீள்விக்கப்பட்டது