பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#

பிரஷ்யநாட் டரசன் பிரெட்ரிக் என்பான், . நித்திரைக் கேற்ற, நிலாவரும் வேளையில், சித்திரக் கட்டிலில் சிற்றிடை மாதர்க்குக் குத்தகை முத்தம் கொடுத்துக் கொடுத்துக் களித்ததே யன்றிக் குளித்ததே இல்லையாம்!

ஆண்டுக் கொருமுறை குளிக்கும் அரசனும், என்றுமே குளித்திடா எஸ்கிமோ மக்களும், அந்நாட்டில் இருக்கலாம். இந்நாட்டில் அல்ல எந்நாட்டு மக்கள் குளிக்கா திருப்பினும் தென்னாட்டு மக்கள் தினந்தோறும் குளிப்பர். முனியம்மா கருவுற்று முழுகா திருப்பினும் அவளும் மூழ்கி ஆற்றில்: நீராடுவாள்!

சூடும் புதுமலர்ச் சுமைகொண்ட கூந்தற் காடு நனைந்திடக் காமக் குரும்பை மேடு நனைந்திட, மேனி நனைந்திடக் காம சமுத்திரக் கதவு நனைந்திடக் கன்னிய ரெல்லாம் காலையில் குளிப்பர். காகமும் இங்கே காலையில் குளிக்கும்.

எழிலரசி கிளியோ பாத்ரா Tiruai, கலப்பட மற்ற கழுதைப் பாலில் குளிரக் குளிரக் குளிப்பது வழக்கமாம்!

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவும்,

கதவுள்ள போதே சாத்திக் கொள்ளவும், 2