பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பேனா, மை அல்லது ஒலை, எழுத்தாணி முதலியவைகள் உபயோகத் தில் வருவதற்கு இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகள் பாக்கியிருக்கின்றன: என்றும் விளக்கினார். 'இன்னும் எத்தனையோ பாக்கியிருக்கின்றன என்பதைக் கி. மு. 1800ஜ வைத்து அதற்குப் பின்னர் என்று கணக்கிடவேண்டும். ஏறத்தாழ இது கி. மு. 1000 ஆண்டளவில் சமற்கிருதம் வரிவடிவ எழுத்தைக்கண்டது என்று கொள்ள வைக்கிறது. இதற்கு 2000 ஆண்டுகள் முற்பட்ட தொல்காப்பியம் 'உட்பெறு புள்ளி உருவாகும்மே” என்று கால் மாத்திரை ஒலியளவு கொண்ட மகரக்குறுக்கத்திற்கு வரிவடிவம் கூறியது. இவற்றையெல்லாம் ஒர்ந்து கண்ட எட்வர்டு தாமசு (Edward Thomas) என்பார், “ வட நாட்டில் ஆதியில் தமிழ் எழுத்தே வழங்கியது. அதினின்றே வடநாட்டு லிபி ஏற்பட்டது ' என்று அறுதியிட்டார். இதனை முன்மொழிந்து சட்டவியலறிஞர் கா. சு. பிள்ளை, ' கிரந்த எழுத்து, தமிழ் எழுத்தின் வழித்தாக வந்தது என்பது யாரும் ஒத்துக்கொள்ளக்கூடியதே ' என்று வழிமொழிந்தார். எனவே, எழுத்தமைப்பில் சமற்கிருதம் தமிம் வமிக்கொண்ட என்ப ருதம் தமழ வழி இ! புலனாகும். அழிந்துபோய் அகழ்ந்து காணப்பெற்றுள்ள ஆரப்பா, மொகஞ்சோதரா நகரங்களில் காணப்பெறும் எழுத்துக்குறிகள் இங்குப்பொருத்திக் காணத்தக்கன. இவ்வெழுத்துக் குறிகள் ஒரு புதிர். புதிரின் விடுவிப்பாக இரண்டு கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ஒன்று இக்குறிகள் இந்தோ ஐரோப்பிய எழுத்துக்களின் குறிகள் ஆகலாம் என்பது இரண்டாவது தமிழ்மொழியின் எழுத்துக்குறிகள் என்பது. மறைத்திரு ஈராசு (Rev. Heeras) இவ்வெழுத்துக்கள் திராவிட மொழியின் முன் உருவ (தமிழ்?) எழுத்துக்கள் என்று கண்டுள்ளமை கொள்ளத் தக்கது. 73 இராகுல் சாங்கிருத்தியாயன்: வால்காவிலிருந்து கங்கை வரை பக். 129, 130 14 தொல்காப்பியர்: தொல். எ . ந கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் பக், 73 86