பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட மொழிச் சொற்கள்ாதலை மொழியாராய்ச்சி வழியே காட்டி வருகிறார்கள் " என்று எழுதியுள்ளார். இவர் காட்டியுள்ள இருவர் ஆய்வுகளின் கருத்தும் வலுவானது. இவ்வலுவிற்கும் యొgశీ கூட்டும் அளவில் மொழியறிஞர் ப. அருளி, -- " சொல்லின் வேரைக் காணற்கும் கண்டுபிடித்தற்கும் இவ்விந்திய மண்ணில் தமிழ் மொழி ஒன்றில் மட்டும்தான் இயல்வதாகும். இவ் விந்திய நாட்டில் பயிலப்பெறும் எம்மொழியை எடுத்து வேர்ச் சொல்லாய்வு நிகழ்த்தினும் அதனின் இறுதியான முடிவாகத்தமிழ் மூல வேரே ஒவ்வொரு பொருட் சொல்லிலும் காணக் கிடைப்பதாகும் ”77 என்று உறுதிக் கருத்தாகத் தந்துள்ளார். இம்முல வேர்ச்சொற்கள் சுட்டொலிச் சொற்களே என்பதை மொழி ஞாயிறு பாவாணர் ‘உல்' என்னும் மூல வடிவைக்கொண்டு விளக்கியுள்ளார். 'இப்போது உள்ள தமிழ்ச் சொற்களில் நூற்றுக்குத் தொண்ணுறு விழுக் காடு சுட்டொலிச் சொற்களே' என்று கண்டு தந்துள்ளதற்கேற்ப இம்மூல வடிவு கொண்டே சொற்களின் அமைவைக் காண முடிகின்றது. . இதே நேரத்தில் சமற்கிருதச் சொற்கள் எந்தவகை மூலவேர் கொண்டவை என்று வரையறுக்க முடியாதனவாக இருந்திருக்கின்றன. அதற் குக் கரணியம் வடமொழிக்கு மொழிக்கரணியம் இல்லாமையே. சமற்கிருத அல்லது பிராகிருதச் சொற்கள் இடுகுறிச் சொற்களே என்னும் இயற்கை உண்மையே. அம்மொழியில் முதன்முதலாகத் தோன்றிய மொழியறிஞர் யாஃச்கர் தாம் மொழிக்கரணியத்தை ஏற்றியவர். அவர் தாம் வடமொழிக்கு வேர்ச்சொற்கள் என்னும் அமைப்பைக் கண்டவர். குத்சர் என்பவர் வேத மந்திரங்களுக்குப் பொருள் இல்லை. பொருளைக் கண்டுபிடிக்க முயல்வது வீண் முயற்சி என்றார். ஆனால், யாஃச்கர் இதற்கு விடையாக ‘எப்படியாவது பொருளைக் காணவேண்டும் என்றார். இவ்வாறு அக்னிகோத்திரம் இராமாநுச தாதாச்சாரியார் எழுதினார். இதற்குப் பின்னரும் பல சொற்கள் வேர் அமைவில்லாமல் நிற்பதைக் கண்டனர். இருப்பினும் சொற்களின் முதனிலை 76 தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்: கட்டுரை-தமிழ்-கலைக்களஞ்சியம் தெ குதி 5 - с பக். 504 77 ப. அருளி. அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் முதல் தொகுதி பக், 12 78 ஞா. தேவநேயப் பாவாணர்: முதல் தாய்மொழி பக். 17 79 இராமானுச தாதாச்சாரியார் யாஃச்கரின் நிருக்தம் பக். 22 88.