பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று, நடக்கும் செயல் - முயற்சி எனப் படிப்படியாக, " நிலையும் வளியும் முயற்சியும் மூன்றும் பயில நடப்பது எழுத்தெனப் படுமே 's என்றார் முந்தைய அறிஞர் ஒருவர். பவணந்தியாரும் மொழி முதற் காரணம் ஆம் அனுத்திரள் ஒலி எழுத்து நன். 58) என்றார். மேலும், தொல்காப்பியர் ஒலிப்பதை-இசைப்பதை "எழுத்து என்று 'ஓரளபு இசைக்கும் ಅppg Tru 'ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து' என்ப 'மூவளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே (தொல், எழு. 3, 4, 5) என்றெல்லாம் 'இசைக்கும்’ என்றும் ஒலித்தலால் "எழுத்து' என்றார். யாப்பருங் கல விருத்தி மேற்கோள் பாடல் ஒன்று, 'செவிப்புலனாவது ஒலியெழுத்தாகும்' என்று விளக்கமாக அறிவித்தது. ஒலி செவியால் கேட்கப்படுவதுதானே. அதற்கு உரு உண்டா? அதனை ஒலி வடிவம் என்று குறிக்கலாமா? குறிக்கலாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியர், 'இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை "அரு' என்பார் அறியாதார்; அதனை உரு என்றே கோடும்' என்று தொடங்கி அதற்கு விளக்கமாக, செறிப்பச் சேறல், செறிப்ப வரல், செவிக்கண் சென்று உறுதல், உருவும் உருவும் கூடிப் பிறத்தல், வன்மை, மென்மை, இடைமை எனப்படுதல், உடம்பொடு புணர்த்தல் என்பவற்றால் உரு என்பது நிலைபெற்றது' என்றார். அவரே, " எழுத்தென்றது யாதனையெனின், கட்புலனாகா உருவும் கட்புல னாகிய வடிவும் உடையவாம் வேறு வேறு வகுத்துக்கொண்டு 86 * 啟 ↔ ... ... - தொல், எழு. பிற-20 மேற்கோள் நூற்பா 87 நச்சினார்க்கினியர்: தொல். 7ಆ. 1-உரை விளக்கம்