பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னையே உணர்த்தியும் சொற்கியைந்து நிற்கும் ஓசையையாம்' என்று ஒசையைக் குறித்து முடித்தார். மயிலைநாதரும், " ஒலியெழுத்து-ஒலி வடிவான எழுத்து (நன். 256 உரை) என்றார். எனவே, ஒலிக்கின்ற ஓசையும் உருவமே. - இந்த ஒலியெழுத்திற்கு 'மாத்திரை’ என்று ஓர் அளவீடு வகுத்தனர். கண் இமைகளை இமைக்கும் நேர அளவும், கை விரல்களை நொடிக்கும் நேர அளவும் ஒத்திருப்பதைக் கண்டறிந்து ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு மாத்திரை அளவு எனப்பெற்றது. ஒருவன் இம்ைத்தலையும் நொடித்தலையும் தானே செய்தும் உணரலாம். பிறர் செய்வதைக் கண்டும் அறியலாம், இதற்கு இரண்டு ஏன்? பலவகைக் குறைபாடுள்ள மக்களை எண்ணி இவ்விரண்டு காணப்பெற்றது போலும், குருடன் ஒருவன் இமைத்து உணரவோ, இமைப் பதைக் காணவோ இயலாத நிலையில் நொடித்தல் ஓசையைக் கேட்டு அறிய லாம். செவிடன் ஒருவன் நொடித்தல் ஓசையைக் கேட்க முடியாமையால் இமைத்தலைச் செய்தும் பார்த்தும் அறியலாம். இவ்வாறெல்லாம் நுணுகி ஒர்ந்து, 'கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை’ என்ற தொல்காப்பியர், இவ்வாறு அமைத்த பண்டைச் சான்றோர்தம் துணுக்க அறிவை எண்ணி, 'நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே (தொல், எழு. 7) என்று பாராட்டி முடித்தார். - • . : . ... " - 'அ' முதலிய குறில் ஒவ்வொன்றின் ஒலிப்பு நேரமும் ஒவ்வொரு மாத்திரை என்று அதனதன் ஒலிப்பு நேரமும், இமைப்பு நொடிப்பு நேரத்துடன் ஒத்திருப்பதைக் கண்டு விதித்தனர். -- * . . . இவ்விமை, நொடி நேரமாம் ஒரு மாத்திரை அளவையும் அதன் தொடக் கம் முதல் முடிவு வரை படிப்படியாக ஒர்ந்து பின்வருமாறு பகுத்துக் கண்டனர். ஆம், இச்சிறு நேரத்தையும் பகுத்துக் கண்டனர். ... . . - 'உன்னல் (உள்ளத்தால் நினைத்தல் கால் மாத்திரை உறுத்தல் (அந் நினைவு உள்ளத்தே உறுத்தல்) அரை முறுக்கல் (அந்த உறுத்தலை முறுக்கி ss நச்சினார்க்கினியர்: தொல், பாயிரம் உரை விளக்கம் 97 дѣ-a-13 * * * * . .