பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுள். உரிச்சொற்களைக் கூறும் செய்யுளாகையால் உரிச்சொல் பனுவல் எனப்பட்டது. சுருக்கங்கருதி உரிப்பனுவல் என்று இந்நூலில் வழங்கத் தொடங்கினேன். உரிச்சொல் பனுவல் எனும் சொற்றொடரைக் கயாதரத்தில் காணுகிறோம். கயாதரருக்கு அடைமொழியாகக் கூறப்பட்டுள்ளது. தமிழில் உரிப்பனுவல்கள் ஏறத்தாழ நான்காம் நூற்றாண்டளவிலேயே உருவாகத் தொடங்கிவிட்டன. கணக்கற்ற நூல்கள் யாக்கப்பெற்றிருக்கும் போலும். நமக்குக் கிடைப்பன சிலவே. பலவற்றின் பெயர்களையே அறிகி றோம். கேள்விப்படுபவை. கிடைத்தவை ஆகிய பலவற்றில் பல மருத்துவ வாழ்வுக்கணி (சோதிடம்) நூல்களாக உள்ளன. மிகச் சிலவே தமிழ்ச்சொல் தொடர்பானவை. நமக்குக் கிடைத்துள்ள முதல் உரிப்பனுவல் சேந்தன் திவாகரம். திவாகர முனிவர் என்பார் இதை இயற்றினார். அவரைப் பாதுகாத்துப் போற்றி இந்நூலை எழுதத் துாண்டியவர் சேந்தன் என்னும் வள்ளல். செய் வித்தோராகிய சேந்தன் பெயரையும் நூலாசிரியனாகிய தன் பெயரையும் இணைத்துச் சேந்தன் திவாகரம் என்று பெயரிட்டார். இந் நூல் நூற்பா போன்ற அடிகளில் அமைந்தது பத்துத் தொகுதிகளைக் கொண்டது. பத்தாவது தொகுதியாக பல்பெயர்க் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்று அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏழு நாள்கள் என்றால் அந்த ஏழு ஞாயிறு முதல் சனி வரை என்று பட்டியலிடப்படும். இந்நூலின் போற்றி பிள்ளை யாராக இருப்பதால் இவர் சைவ சமயத்தவர். இவரது மாணவர் பலருள் பிங்கலர் என்பவர் ஒருவர். அவர் சிறந்த சொற்புலமை பெற்றவர். திவாகரரிடமும் கற்றவர். முன்னே குறிப்பிடப்பட்ட திவாகரத்துக்கு முன்னர் ஆதி திவாகரம் என்றொரு நூல் இருந்துள்ளது, அந்நூல் அளவிளமுடியாத நூற்பாக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது போலும், அது பயில்வோர்க்கு வாய்ப்பாக இல்லாமையால் திவாகர முனிவர் தன் சேந்தன் திவாகரத்தை எழுதினார். இதனை ஏறத்தாழ அடியொற்றித் தானொரு உரிப்பனுவல் உருவாக்கத் தொடங்கிய பிங்கலரும் பிள்ளையார்க்கே வணக்கம் கூறினார். இந்நூலும் நூற்பா அமைப்பில் அமையினும் நூற் பாக்கள் அகவற்பா அமைப்பைக் கொண்டவை. பத்துத் தொகுதிகளைக் கொண்ட இந்நூல் ஒவ்வொரு தொகுதியும் வகை என்னும் உட்பிரிவுகளால் பலவகையாக விரிந்திருந்தது. பிங்கலம், பிங்கலந்தை என்றும் வழங்கப்படும். முன்னர் இந்நூலும் நிகண்டு என்னும் சொல்லால் வழங்கப்பட்டதில்லை. இந் நூல் நான்காயிரத்து நூற்று தொண்ணுற்றோர் அகவல்களை உடையது. 109