பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தை + மனி=சிந்தாமணி, சூளை --மணி=சூளாமணி போன்றே சூடை-மணி=து.டாமணி ஆயிற்று. சிகை-மணி=சிகாமணி எனப்படுவதும் மேலும் ஒரு சான்றாகும். 'சூடாமணி’ என்பதற்குத் தலையாய சிறந்த மணி என்று பொருள். இச்சூடாமணி, சூளாமணியை ஒத்ததே. ஆனால், இரண்டும் ஒன்று அன்று என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். உடன்பாட்டுப்பொருள் ஒத்தது; எதிர்மறைப்பொருளில் வேறுபட்டது என்பதைக் குறிப்பாகக் கொள்ளல் வேண்டும். மணி சூடப்பெறுவதற்கு உரியது. சூடப்பெறாத மணி பயன்படாத விண் பொருள். வாழ்வுப் பயன்பெறாத கணவனை இழந்தவள் கைம்பெண் எனப் பெறுவாள். கைம்பெண்ணைப் பாடவந்த பாவேந்தர் பாரதிதாசனார் பாடாத் தேனி, உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ ” என்று அடுக்கினார். இவைபோன்று சூடப்பெறாத மணி 'சூடாமணி என்றால் சிறந்த இந்த மணியும் கணவனற்ற "கைம்பெண் மணி'யாகி அவலப் பொருள் ஆகும். எனவே எதிர்மறைப் பொருள் பொருந்தாது. - - நிறைவாகச் சூடைமணி-கு.ாமணி என்பதே ೧L7೮,55615) இதுவரை, மணி சிந்தாமணி சூளாமணி சூழாமணி சூடாமணி - எனும் சொல்லமைப்புகளும், பொருள் விரிவுகளும் காணப்பட்டன. ஒவ்வொன் றும் தனித்தனியே ஒவ்வொரு நூலுக்கும் பெயராயிற்று. மணிப்பெயரில் அகநானூற்றின் இரண்டாவது பகுதி 'மணிமிடை பவளம் எனப்பெற்றது; 'மணிமேகலை காப்பியப் பெயர். இவை மணிச்சொல் 123