பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலமைத்ததில் குறிப்பிடத்தக்க மற்றொன்று, ஒவ்வொரு தொகுதியின் இறுதிப் பாடலும் அடுத்து வரும் தொகுதியை அறிமுகப்படுத்துவதாகும். இம் முறைகளைத் திட்டமிட்டுக் கையாண்டுள்ளார். இவர் விரை மண்டலவர் என்றும் குறிப்பிடப்படுவார். வீரை என்பது இவரது ஊரின் பெயர். வி. மங்கலம், வீரமாங்குடி என வீரப்பெயருடைய பல ஊர்கள் உள்ளன. அவற் றில் ஒன்றன் சுருக்கமாக இஃது அமையும். காரைக்கால் காரை என்றும் காரைக்குடி காரை என்றும் குறிக்கப்படுவதுபோல இவ்விரை அமைந்தது. சங்ககாலத்தில் வீரை வெளியானார் என்றொரு புலவர் வாழ்ந்துள்ளார். அவரது பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. வீரைவெளி என்பது ஊர்ப் பெயர் என்றும் வீரைவெளியன் அவர் பெயர் என்றும் குறிப்பிடுவர். அவ்வா றன்றி விரை என்பதையே ஊர்ப்பெயரின் சுருக்கமாகக் கொள்ளவேண்டும் வெளியன் என்று பெயர் அமைய வாய்ப்பு உண்டு. ஊரன் என்று பெயர் அமைவதும் வெள்ளிவீதியார் என்று தெருப்பெயர் கொண்டு அமைவதும் அறியப்பட்டவைகளே. அவ்வாறே கொண்டு வீரை வெளியனா ரும் நோக்கத்தக்கவராவார். சங்ககாலப் பெயரமைப்போடு இவர் திகழ்வது குறிப்பிடத்தக்க ஒன்று. - - இவர் பண்டையோர் வழக்கிலிருந்து வேறுபடாமல் தந்நூலை அமைத் துள்ளார். ஆனால் முன்னர்க் குறையாகக் குறிக்கப்பட்ட எதுகை காட்டி வர்க்கம் என்று அமைத்துள்ளமை வேறுபட்ட ஒன்றாகும். முந்நூல்களைப் போல இந்நூலும் பன்னிரண்டு தொகுதிகளில் அமைந்துள்ளது. எனவே இவரை நாட்டுப் பிரிவின் பெயராகவும் அருகபதம் பெற்றவர் பெயராகவும் கொள்ள இயலவில்லை. இவ்வாறு தனியொரு தன்மையைக் குறிக்கவே புருடன் என்ற சொல் சேர்க்கப்பட்டு மண்டலப்புருடன் எனப் பட்டார். இவர் உரிச்சொற்களை ஆழ்ந்துகண்டு உளத்தில் பதித்து நிரலாக்கிக்கொண்டு பாடல்களில் அமைத்துள்ளார். முன்னூல்கள் இவருக்குத் துணை புரிந்திருப்பினும் இவர் தம் பாங்காகத் தனியொரு நடையையும். நிரலமைப்பையும் கையாண்டுள்ளார். இவற்றாலும் சூடாமணி நிகண்டு மிகுதியாகப் பயிற்சியில் கொள்ளப்பட்டமையாலும் இவரொரு தனிச்சிறப்பைப் பெறுகிறார். மண்டவம் என்றொரு சொல் உண்டு. அது மண்டலம் என்பதன் திரிபுதான். மண்டவம் என்றால் சுங்கச்சாவடி என்று பொருள். இதனை நிகண்டிலும் காணலாம். + 11. சமயத் தாக்கம் t இந்திய நாட்டில் சமயங்கள் பெருகி வளர்ந்தன. இருப்பினும் சைவ சமயத்திற்கு மிகுதியும் இடம் உண்டு. வைணவம் பல இலக்கியங்களைக் 126.