பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணையாக அமைந்தன. சேக்கிழாரின் பெரியபுராணமும் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணமும் குறிக்கத்தக்கவை. இலக்கியங்கள் போன்றே இலக்கண நூல்கள் தமிழுக்குக் கட்டுக் கோப்பான பாதுகாப்பைத் தந்துள்ளன. அவற்றிலும் சமணத்தார் செய்தவை குறிக்கத்தக்கவை. இவ்வகையில் பெருநோக்கு- ன் நோக்கினால் சம பத் தாக்கமும் சில நன்மைகளைத் தந்துள்ளது என்று குறிக்கலாம். பழம்பெரும் இலக்கியங்களில் மணிமேகலை பெளத்தச் சார்புடையது. பெளத்த சமயக் காப்பியம் என்றே சொல்லலாம். அதற்குப் பின்னர், இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் ஆசிரியர் நோக்கில் சமணத்தைச் சார்ந்தது என்.ாலும் இலக்கியத்தில் சிலப்பதிகாரம் என்றோர் மணி பாரம் படைத்த தமிழ்நாடு' என்று பாரதி பாடும் அளவிற்கு தமிழுக்கு மணி பாரமாகத் திகழ்கின்றது. மணி பாரம் மட்டுமன்றி வரலாற்றுச் செய்திகளையும் பண்பாட்டுச் செய்திகளையும் தமிழரின் வீரச் செய்திகளையும் ஆங்காங்கு தந்துகொண்டே செல்வது. சிலம்பில் வஞ்சிக்காண்டம் தனியொரு விர வரலாற்றைத் தருவது. வட வரை வென்று அவர் தலையில் கண்ணகி சிலைக்குக் கல் கொணர்ந்ததை அறிவிக்கின்றது. உண்மையாக அங்கிருந்து கனகவிசயர் என்ற சிற்றரசர் தலையில் வைத்துக்கொண்டுவர முடியுமா என்றால் கண் ணகி சிலையைப் பார்த்தோர் முடியும் என்று கூறுவர். கண்ணகி சிலை ஒன்றரை அடிக் கல்லில் செதுக்கப்பட்டது. அச்சிலையின் அடியில் ஒன்பது மணிகள் இடம் பெற்றிருக்கலாம் என்ற நோக்கில் வெடிவைத்துத் தகர்க்கப் பட்டது. தகர்க்கப்பட்டதன் மேல் பகுதி கரந்தைக் கல்லூரி மாணவர்களால் காணப்பட்டு அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய சி. கோவிந்தராச னாரிடம் வழங்கப்பட்டது. இச்செய்தி ை யான் இன்றும் முதல்வராக உள்ள டாக்டர் கலைஞர் அவர்களிடம் ஒரு கூட்ட மேடையில் கூறியபோது அவர் துள்ளிப் பின் பக்கம் என்னைப் பார்த்து அமர்ந்தார். அவ்விவரத்தைக் கூற அப்பேராசிரியரை அழைத்து வருமாறு குறித்தார். அதன்படி கண்ணகி சிலைப்பகுதியுடன் அப்பேராசிரியரை அழைத்துச்செல்ல நேர்ந்தது. அச் சிலைப்பகுதி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்றும் அரசிடம் உள்ளது. இவ்வாறு அமைந்த சமயத் தாக்கங்களும் இங்கு குறிக்கத்தக்கனவாகும். 12 சமயத்தொடு வடமொழித் தாக்கம் வடமொழித்தாக்கம் இந்தியா எங்கனும் நிகழ்ந்துள்ளது. ஒரு காலத் தில் ஆரியச் சிதைவு மொழியாக மையத்தரைக்கடல் பகுதியிலிருந்து வந்து புகுந்தது. இந்தியா எங்கனும் பரவி பல புது மொழிகளையும் தோற்றுவித் 129 g5-a-17