பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் சூடாமணி செய்யுள்-2 2 பூமலி அசோகின் நீழல் பொலித்தாம் அடிகள் முன்நாள் ஏமமா முதல்நூல் சொல்லக் கணதரர் இயன்ற பாவால் தாம்.ஒரு வழிநூல் சொல்லச் சார்புநூல் பிறரும் சொல்லத் தோம்இலா மூன்று நூலும் துவம்என உதித்த அன்றே.” பொருள்: பூ மலி அசோகின் நீழல் - பூக்கள் மிகுந்த அசோகமரத்தின் நிழலில் பொலிந்த எம் அடிகள் - அழகாய் அமர்ந்த அருகக் கடவுள் முன் நாள் - தொன்மைக் காலத்தில் ஏமம் ஆம் முதல் நூல் சொல்ல - மாந்தரின் இன் பத்திற்குரிய முதல் நூலைச் சொல்ல - - கணதரர் - கணதரர் என்னும் பெயர் கொண்ட அருகசமய ஆசிரியர் இயன்ற பாவால் - தமக்கு இயல்பான பாடல்களால் தாம் ஒரு வழிநூல் சொல்ல - தாம் ஒரு வழி நூலைச் சொல்ல பிறரும் சார்புநூல் சொல்ல-பிற ஆசிரியர்களும் சார்புநூல் சொல்ல தோம் இலா - குற்றம் இல்லாத மூன்று நூலும் - இம்மூன்று வகை நூல்களும் துவம் என - நிலைத்த நூல்களாக உதித்த - தோன்றின பொருள் விளக்கம்: 'அடிகள்' என்பது கடவுளைக் குறித்தும், அடியவர்களைக் குறித்தும் வரும். இது சமண சமயத்தார் வழக்கு, பாட வேறுபாடு: 1. 'இலக்கணத்தியன்ற பாவால்: இயற்கணத்தியன்ற பாவால் -- தாம் ஒரு வழிநூல் சொல்ல என்று தொடர்கின்றது.' 'கணதரர் தாம் என்று இயையும் இயைபு இவ் விரண்டு பாடங்களால் அமையாது. من 2. உதித்தது ஆன்றே - மூன்று நூலும் என்னும் பன்மை உதித்த' என்னும் பன்மை வினைகொண்டு முடியும். - 3