பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்--57 தென்றல். நெருப்பு வருதென்கால்சிறுகாறென்றிமலயக்கால்வசந்தன்தென்றல் அரிவசுத்தகனனங்கியனலயவாகனன்றி எரிசு சிசிகியேயாரலியங்குகாற்றின்சகாயன் கருநெறிகன லியேயங்காரகன்சித்திரபானு 57 வருதென்கால். சிறுகால், தென்றி மலயக்கால், வசந்தன், தென்றல் அரி,வசு, தகனன், அங்கி, அனல், அப வாக னன்,தி, எளி,சுசி, சிகியே ஆரல், இயங்குகாற் றின்ச காயன், கருநெறி, கனலி யே அங் காரகன். சித்திர பச்னு. பெ. பொ. விளக்கம்: தென்றல்-தெற்கிலிருந்து வருவது தென்கால்-தெற்குக் காற்று சிறுகால்-சிற்றசைவில் வரும் காற்று தென்றி-தெற்குத் திசையுடையது மலயக்கால்-பொதி மலையினின்றும் வரும் காற்று வசந்தன்-வயந்த பருவத்தில் வருவது அரி-அழிப்பது வசு-பேரொளியுடையது தகனன்-சாம்பலாய் எரிப்பது அங்கி-மேலுயர்ந்து வளர்வது அனல்-எரிபொருள்களால் நிறைவாகாதது அயவாகனன்-ஆட்டை ஊர்தியாகக் கொண்டவன் தி-கொழுந்துவிட்டெரிவது 3. . எரி-எரிப்பது சுசி-துயரம் தருவது சிகி-பிழப்புடையது ஆசல்-தன்னிடம் சேர்ந் ததை உணவாகக் கொள்வது.