பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலவியல் கருத்தில் அமைந்தது. நிலப்பாகுபாடு செய்த முதன்மைத் * தமிழ்ச் சான்றோர் இம்முறை வைப்பே வைத்தனர். இஃது இயறகை நிலவியல் மட்டு மன்று; இயற்கை வாழ்வியல் நோக்கும் கொண்டது. (முறையே - மாந்தன் வாழ்வியலில் புணர்ச்சி, இருத்தல், ஊடல். இரங்கல் என அடுத்தடுத்து இயல் பாக அமையும் உணர்ச்சி நிகழ்வு கொண்டது. இவ்வுணர்ச்சி நிகழ்வு உரிப் பொருள்-வாழ்க்கைக்கு உரிய பொருள்-எனப்பெற்றது.) இலக்கிய, இலக்கணப் படைப்பு கருதிய தொல்காப்பியர் இம்முறையில் ஒரு மாற்றம்செய்து முல்லையை முதலில் வைத்து, " முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே ' ; என்றார். இதன் கருத்தை இவ்வாறு கொள்ளவேண்டும். 'சொல்லிய முறை" என்பது முன்னர் உள்ள முறை உண்டு; அது குறிஞ்சியை முன்மையாகக் கொண்டது. இங்கே இலக்கிய இலக்கணம் கருதிச் சொல்லிய முறை; இவ்வாறு இலக்கிய, இலக்கணம் கருதிச் "சொல்லவும் படும்” என்று உம்மையால் அழுத்தம் கொடுக்கப்பெற்றது. வாழ்வியல் அகப்பொருள் கூறும் நம்பியகப்பொருள் என்னும் நூல் ' குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் ஐந்திணைக்கெய்திய பெயரே 爱壁 என்று முறையாகக் கூறிக்காட்டுகிறது (ந. அ 6) எனவே, குறிஞ்சியை முன்மையாகக் கொள்ளுவதே இயல்பு முறை ஆகும். இதுதான் நிலவியல் அடித்தள முறை; நெறிமுறையுங்கூட - ------ - ۰ - - எவ்வாறு? இயற்கைக் குமுறலால் கடலிலிருந்து தோன்றிய முதல் நிலம் மலை தான். அங்கு முளைவிட்ட ஊன்மந்தான் முதலில் தோன்றியது உயிரியல் கூறு. அதிலிருந்து படிமுறைப்படி தோன்றி வளர்ந்த மாந்தனும் இம்மலை யின் கற்பிளவுகளிலும், குகைகளிலும் தங்கினான்; இவற்றின் சுற்றுச் சூழலில் உலவினான். ஆண்-பெண் உணர்வின் புணர்ச்சி வாழ்வு மலர்ந்தது. இதனைப் பின்னர் குறிஞ்சியின் புண fr## வாழ்வாகிய உரிப்பொருள் என்றனர். இம்மலைப்பகுதியில் இயற்கையாக ஊறிக் கசிந்த நீர்த்துளிகள் இணைந்து "சிலு சிலு அசைவு கொண்டது; தொடர்ந்து சலசல ஒட்டமா 25 தொல்காப்பியர்: தொல்-பொருள் 5-5, 6 ፶፩