பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலிதல் இவற்றின் வகைப்பாட்டால் வரையறை கொண்டதே மொழி. தொண்டையிலிருத்து ஒலியை அதன் வன்மை, மென்மை, @ణాL65ల్లో ஏறப, வாயில் உள்ள நாக்கு, உதடு, மேல்வாய், பல், முக்கு ஆகியன தம் ஒத்துழைப் பால் எடுத்தும், படுத்தும், நலிந்தும் உண்டாக்குகின்ற சொல்லுருவில்தான் மொழி பிறக்கிறது. இவற்றால் வாய் மொழியின் தாய் ஆகிறது. மூன்றாவதில் நிறுத்தப்பெற்றுள்ள மூக்கு மனத்தை முகர்வது. இஃதே இதன் புலன் அறிவு முகர்வாலேயே "முக்கு' என்னும் பெயர் பெற்றது. இப் புலன் அறிவுடன் மூச்சோட்டத்திற்கு மூக்கு முளைத் து முன்வந்துள்ளது. மூச்சுக்காற்றைக் கொள்ளவும் தள்ளவும் உள்ளுறுப்பாகிய நுரையீரல் பொறுப் பேற்றுள்ளது. இம்மூச்சுக்காற்று உள்ளே செல்லப் பாய்காலாகவும், வெளியே விட, வடிகாலாகவும் இம்முக்கு உள்ளது. மொழிக்கும், அதன் ஒலிக்கும் மூலமாவது "உந்தி முதலா முந்து வளி' யாம் காற்று. இக்காற்றை உள்ளே வாங்கித் தரும் பங்கு கொண்டதால் மூக் மொழிக்குரிய உறுப்புக்களில் ஒன்றாகியது. அத்துடன். "முக்கின் வளியிசை” யால் மெல்லெழுத்து பிறக்கிறது. இதனால் முக்கு மொழிப்பணியில் ஒரு கூறு கொண்ட உறுப்பாகியது. நான்காவதான செவி ஓர் ஒலிவாங்கி, மொழியின் பயன் அதனை ஏற்போனால் உண்டாவது. ஏற்போனுக்கு உதவியாக இச்செவி ஒலிவாங்கும் பணியைச்செய்து மொழிக்கு உறுப்பாகியது. ஐந்தாவதும் நிறைவானதுமாகக் கண் ஒளிர்கிறது. மொழிக் கூறில் கண் இருவகைப் பணி கொண்டது. ஒன்று, சைகை மொழியைப் புரிந்து கொள்ள, கண் தன் பார்வைப் பணியைச் செய்கிறது. இரண்டு, ஒலியாகப் பிறந்த எழுத்திற்கு அதன் தொடர்பில் எழுதப்பெறும் வரி வடிவத்தைத் தன் பார்வைப் பணியால் கண் வடிவை ஈர்த்துக்கொடுத்துப் பணி செய்கிறது. ಹಣಾಗಿಸಿ ಕೆಲ್ಸಕಿ, உறுப்பில்லை" என்று சிறப்பித்தமைக்கு ஏற்ப கண் மொழித்துறையிலும் மேலே கண்ட இரு பணிகளாலும் உயர்வு தாண்ப்பியர்: தொல், ஏழு : ി :ټئ:, too