பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பதிப்பாசிரியர் என்னென்ன செய்யவேண்டும் என்று இலக்கணம் i ஏதுமில்லை. வேண்டுமானால் மிகுபுலமை திரு உ. வே. சா. அவர்கள் கையாண்டுள்ளமை பதிப்பு இலக்கணம் என்று கொள்ளலாம், யான் அவ் -விலக்கணத்தை மேற்கொண்டும் மேலும் சில புதுமுறை களைப் படைத்தும் இப்பதிப்பை உருவாக்கியுள்ளேன். இவ்வுருவாக்கம் வழக்கற்று நிற்கும் சூடாமணியை நாற் பயிற்சியில் ஆர்வம் உடையோரின் நினைவில் நிறுத்தும். இப்பதிப்பிற்குரிய விளக்கவுரைகளுக்கு மேல் பதிப் பாசிரியர் உரையில் ஒன்றைக் குறிக்கவேண்டும். அஃதாவது ஒரு சிறந்த சொற்களஞ்சிய நூல், கழிந்து போகாமல் புதியன புகுவதோடு மறைய இருந்த ஒருநூல் படிப்பார்வலர்களிடையே வழக்கிற்கு வந்துள்ளது. சூடா -மணி ஒரு சொற்களஞ்சிய நூல். உரிச்சொற் பனுவல் என்றாலும் இதன்களை உள்ள உரிச்சொற்கள் பெயர் உரியாகவும் வினை உரியாகவும், இடை உரியாகவும் அமைந்து நான்கு வகைச் சொற்களின் சொற்களஞ்சியமாக அமைந்ததாகும். மிகு உழைப்பில் இப்பதிப்பு உருவாகியதாயினும் இதனால் ஏற்படும் பயன் மிகு உழைப்பையும் சிறப்பிப்ட தாகும். பதிப்பாசிரியராகிய என் கருத்துக்கள் ஆராய் வுரையிலும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. அவற்றைப் படிக்கும்போது பதிப்பாசிரியர் உரையாகவும் கொள்ளலாம். எனவே பதிப்பாசிரியர் உரை இதனோடு முடியாது ஆராய்வுரையிலும் தொடர்கிறது. கலைக்குடில், அன்பன், 58, எழில்நகர், தஞ்சை 7 - கோவை. இளஞ்சேரனார்