பக்கம்:சூரப்புலி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A%து, & #44. * கூறிக்கொண்டே மற்ருெருவன் அவருடைய அங்கியைக் கழற்றத் தொடங்கின்ை. அதைக் கண்டதும் சூரப்புலி சீற்றத்தோடு அவன் மேல் பாய்ந்து அவனேக் கீழே மல்லாக்கத் தள்ளியது நெஞ்சின்மீது எறிக் கழுத்திலே தன் வாயை வைத்தது. ஓர் கணத்திலே இந்தச் சம்பவம் நடந்துவிட்டது. அடுத்த கணத்திலே சூரப்புலி அந்தத் திருடனின் குரல்வளையைக் கடித்துத் துண்டித்துவிட்டிருக்கும். ஆனல் துறவி ஓடிவந்து தடுத்துவிட்டார். அவர்கள் விரும்பியதை யெல்லாம் எடுத்துக்கொள்ளட்டும். நீ சும்மாயிரு” என்று கூறி அதை ஒரு மூலேயிலே படுக்குமாறு செய்தார். கீழே விழுந்த திருடன் கோபத்தோடு எழுந்தான். வாயில் வந்தவாறு ஏதேதோ பேசிக்கொண்டு துறவியின் உடைகளே ஒன்றுவிடாமல் கழற்றி எடுத்துக்கொண்டான். அவருடைய பாதரட்சைகளேயும் தூக்கிக் கொண்டான். மறுநிமிஷத்திலே திருடர்கள் புறப்பட்டுவிட்டார்கள். தம் இடையிலே இருந்த கெளபீனத்தோடு துறவி அமர்ந்திருந்தார். அப்பொழுதும் அவருடைய புன்னகை மாறவில்லே. சூரப்புலி மட்டும் முணுமுணுத்துக்கொண்டே படுத்திருந்தது. பிறகு, மெதுவாக எழுந்து துறவியிடம் வந்தது. அப்பொழுதும் முணுமுணுப்பதை நிறுத்தவில்லை. என், தடுத்துவிட்டேனென்று கோபமா ?' என்று சிரித்துக் கொண்டே துறவி கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/109&oldid=1276975" இலிருந்து மீள்விக்கப்பட்டது