பக்கம்:சூரப்புலி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணத்திலே அதன் மார்பைப் பகிர்ந்துவிடும். அதனல், சிறுத்தை கீழே விழுவதற்கு முன் லாகவமாகத் தன் உடம்பைத் திமிறித் தனது கால்களைத் தரையில் ஊள்றி நின்றது. அப்பொழுதும் காட்டெருமை தனது தாக்குதலை விடாமல் வாலே உயரத் தூக்கிக்கொண்டு, தலையைக் கீழே குனிந்து மூர்க்கத்தோடு சிறுத்தையின்மீது பாய்ந்தது. சிறுத்தை இதை எதிர்பார்க்கவில்லை. அதன் இடது முன்னங்கால் சப்பைப் பகுதியிலே எருமையின் கடினமான கொம்புகள் தோல் வகிர்ந்துவிட்டன. சிறுத்தைக்கு அதற்குமேல் போராட விருப்பமில்லை. அது திடீரென்று பாய்த்து வந்ததுபோலவே மறுபுறம் திரும்பி அம்பு போலப் பாய்ந்தோடி மறைந்தது. காட்டெருமைக்கும் உடம்பிலே சில காயங்கள் எற்படாமலில்லே. ஆல்ை, அவற்றை லட்சியம் செய்யாமல் தனது கன்றைக் காத்த பெருமிதத்தோடு கம்பீரமாக, சிறுத்தை சென்ற திசைக்கு எதிர்த்திசையில் மரங்களிடையே புகுந்து சன்றுவிட்டது. ஒருவிதமான சம்பவமும் நடைபெருததைப் போல "ருமைக்கன்று துள்ளிக் குதித்துக்கொண்டு தாயின் பின்னல் சென்றது. இந்தப் பயங்க சம்பவத்தை நேரில் பார்த்த சூரப்புலி செய்வதறியாமல் அசைவற்றுப் படுத்துக் கிடந்தது. புதரை விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/20&oldid=1276986" இலிருந்து மீள்விக்கப்பட்டது