பக்கம்:சூரப்புலி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கருப்பா, ஏன் இவ்வளவு நேரம்?' என்று தாடிக்காரன் கொஞ்ச கோபத்தோடு கேட்டான். “இந்த நாய்க்குட்டி வழியிலே கிடச்சுது. அதைக் கூட்டிக் கிட்டு வர நேரமாயிட்டது' என்று கருப்பன் பொய் சொன்னன். சூரப்புலியைக் கூட்டிக்கொண்டு வந்ததினுல் நேரமாகிவிடவில்லே.

  • இது குட்டியா? சோத்துக்குச் செத்த நாயல்லவா இது? உனக்கு இது எதற்கு ' என்று உறுமினன் தாடிக்காரன்.

"இங்கே காவலுக்கு இருக்கட்டும்; நம்ம காரியத்திற்கு இது உதவியாக இருக்கும்’ என்ருன் கருப்பன். சோத்துக்குத்தான் கேடு : இது உனக்கு என்ன உதவி செய்யப்போகிறது?’ என்று சொல்லிக்கொண்டே தாடிக்காரன் குப் புலியின் முதுகில் ஓங்கித் தட்டினன். சூரப்புலி வீல் என்று கத்திக் கொண்டு ஓடைப் பக்கம் ஒட்டம் பிடித்தது. தாடிக்காரன் சிரித்துக்கொண்டே, நல்ல சூரப்புலி உனக்குக் கிடைத்ததடா, சரி, இட்டலி எங்கே? எடு சீக்கரம், ரொம்பப் பசிக்கிறது' என்ருன். கருப்பன் தான் கொண்டுவந்திருந்த மூட்டையை அவிழ்த் தான். அதற்குள்ளே ஒரு பாத்திரத்தில் நிறைய இட்டலி இருந்தது. தாடிக்காரன் சட்டினியைத் தொட்டுக்கொண்டு இட்டலியை ஆவ லோடு வாயில் போட்டு அவசரம் அவசரமாக விழுங்கினன். "எங்கடா, ஈரல் கறி வாங்கி வரவில்லயா?" என்று அவன் இட்டலியை வாயில் குதப்பிக்கொண்டே கேட்டான். சாப்பிடுவதிலே அவன் சூரப்புலி. ஈசல் என்ருல் அவனுக்குத் தனிப்பிரியம். “இந்நேரத்திலே ஈரல் கிடைக்குமா? எல்லாம் மத்தியானம் வரும்-பிரியாணியும் ஈ ர ல் கறியும்' என்று பதில் கொடுத்தான் கருப்பன். தாடிக்காரன் சூரப்புலியைக் கூப்பிட்டு அதன் முன்னல் ஓர் இட்டலியை வீசியெறிந்தான். அவனிடம் ஆரம்பத்திலேயே அதற்கு வெறுப்பு எற்பட்டிருந்தாலும் பசியின் கொடுமையால் இட்டலியை ஆவலோடு தின்றது. தாடிக்காரன்குகைக்குள்ளே போப் ஒரு புட்டியை எடுத்துவந்தான். திறந்து மடக்குமடக்கென்று இரண்டு வாய் குடித்து விட்டு மறுபடியும் இட்டலியை விழுங்கத் தொடங்கின்ை. தாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/25&oldid=840585" இலிருந்து மீள்விக்கப்பட்டது