பக்கம்:சூரப்புலி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தன்னக் காப்பற்றியதை எண்ணி எண்ணிக் குதூகலம் அடைந்த அவருடைய அன்பின் அளவை அதல்ை புரிந்துகொள்ளவே முடி வில்லே. குருட்டுப் பிச்சைக்காரன் அதனிடத்தில் அன்பு செலுத்தின. யோசித்துப் பார்த்தால் அந்த அன்பில்கூடக் கொஞ்சம் சுயநல கலந்திருந்தது. அவனுக்குச் சூரப்புலி பெரிய உதவியாக இரு தல்லவா ? சூரப்புலி இல்லாவிட்டால் அவன் வாழ்வதே சிரம் மேலும், அவனுடைய பேராசைக்குக் காரணமான பணமும் அதை தான் கிடைத்தது. அதனுல்தான் அவனுடைய அன்பில் சுயநல இருந்ததென்று சொல்ல முடிகிறது. ஆல்ை, துறவி சூரப்புலிப் மிருந்து எவ்வித உதவியையோ பயனயோ எதிர்பார்த்ததாக தெரியவில்லை. பணத்திலே அவருக்குப் பற்றில்லே என்பது ப சமயங்களிலே நன்ருக வெளியாயிற்று. காணிக்கையாக மக்க கொடுக்கும் பணத்தைக்கூட அவர் அப்படியே ஏற்றுக்கொள்ளு தில்லை. தம்மிடம் வருகின்றவர்கள் மகிழ்ச்சி யடையட்டும் என் எண்ணியே ஒரு சிறு நாணயத்தை அவர் எடுத்துக்கொண் மற்றவற்றைத் திருப்பிக் கொடுத்துவிடுவார். அவர் தம் உடன் பற்றியோ பாதுகாப்பைப்பற்றியோ சிந்திப்பதாகவும் தெரியவில் இருந்தாலும், சூரப்புலியிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தா ஆல்ை அந்த அன்பை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள அவ விரும்பவில்லே. அவருடைய அன்பிலே சுயநலம் என்பது அணுவள. கூட இல்லை. சுயநலம் என்பதையே வென்றுவிட்டவர் அவர் அவருடைய அன்பைப் போல உயர்ந்த அன்பு வேறெங்கும் இருச் முடியாது. அந்த அன்பைச் சூரப்புலியால் முற்றிலும் புரிந்துகொள் முடியவில்லையென்ருலும் அந்த அன்பு சூரப்புலியை அடியே கவர்ந்துவிட்டது. சூரப்புலி அந்த அன்பிலே தன்னே முழுமைய அர்ப்பணம் செய்ததால் அது பெரிய மகிழ்ச்சியை அடைந்தது. அே சமயத்தில் அந்த அன்புக்குக் காரணமான துறவியும் குருட்டு பிச்சைக்காரனப்போலத் தன்னே விட்டுப் பிரிந்து விடுவாரோ என் பய்மும் கொண்டது. அவரை எப்பொழுதும் விட்டுப் பிரியாதிருச் வேண்டும் என்று ஆவல் கொண்டது. ஒருநாள் இரவு முழு நில அற்புதமாக வானத்தில் எழுந்! வெள்ளிக்கிரணங்களைப் பொழிந்துகொண்டிருந்தது. அதன் மோக ஒளியிலே கானகமே மயங்கி ஒரு புதிய அழகைப் பெற்று விளி கிற்று. துறவி ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து 4,5ಣ கடந்து ஒற்றையடிப் பாதையிலே நடக்கலானர். சூரப்புலி தயாராக் பக்கத்திலே வந்துகொண்டிருந்தது. துறவி தம்மையே மறந்: ஏதோ ஒரு சக்கியால் கவரப்பட்டவர்போல நடந்தார். அவரு:ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/71&oldid=840637" இலிருந்து மீள்விக்கப்பட்டது