பக்கம்:சூரப்புலி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அதன் உடம்பிலே எளிதில் காயம் செய்யமுடியாது. இது வரையிலும் சூரப்புலி கரடியோடு போரிட்டதில்லை. அதனல் அதனுடைய பலத்தை யறியாமல் சண்டையிட்டது. ஆல்ை வெகு :க்கிரத்தில் அது கரடியின் பிடியில் அகப்பட்டுக்கொண்டது. கரடி பலமாக உறுமிக்கொண்டு அதன் மண்டையில் ஓங்கியடிக்கத் தயாராயிற்று. அந்தச் சமயத்திலே துறவி தம் கையிலே ஒரு தீப்பந்தத்தைச் கழற்றி வீசிக்கொண்டு வேகமாக ஓடி வந்தார். கோபத்தோடு தாய்க்கரடி வந்து சூரப்புலியைத் தாக்கத் தொடங்கியதைக் கண்டதும் அவர் ஆசிரமத்திற்குள் ஓடி, ஒரு நீண்ட மூங்கிற்கழியில் பெரிய பந்துபோலத் துணியைச் கற்றி, அதில் மண்ணெண்ணெயை விட்டுத் தீமூட்டி எடுத்துக்கொண்டு வந்தார். கரடிக்குப் பக்கத் திலே வந்து அந்தத் தீப்பந்தத்தைக் காட்டி அதை மிரட்டினர். 'உஸ், உஸ், ஒடு, ஒடு” என்று பலவாறு உரத்துச் சத்தமிட்டார். ஆாப்புலியை அடிப்பதற்கு ஓங்கித் தயாராக இருந்த பாதத்திற்கு நேராகத் தீப்பந்ததை வேகமாக நீட்டினர். கரடி சட்டென்று சூரப் புலியை விட்டு விட்டுத் துறவியின்மேல் பாய எத்தனித்தது. துறவி கரடிக்குட்டி தரையிற் கிடக்கும் பக்கமாகப் பின்னலேயே கால்களே வைத்துப் பின்வாங்கினர். கரடிக்குட்டியைத் தாண்டியதும் பயங்கர நாகக் குரல் கொடுத்துக்கொண்டு தீப்பந்தத்தைச் சுழற்றினர். கரடிக்கு என்ன தோன்றிற்ருே தெரியவில்லை. அது துறவியைத் தாக்கும் எண்ணத்தை விட்டுவிட்டுத் தன் குட்டியை வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு, கர்கர் என்று கோபமாக ஒசையிட்டுக்கொண்டும் றிேக்கொண்டும் காட்டிற்குள் புகுந்து ஓடிவிட்டது. வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த சீடர்களும் சத்தங்கேட்டு இதற்குள் அங்கு வந்து சேர்த்தார்கள். துறவி அன்போடு சூரப் லியைத் தட்டிக் கொடுத்துவிட்டு ஆசிரமத்திற்குள் நுழைந்து தியானத்தில் அமர்ந்தார். அடுத்த கணத்தில் அவர் உலகை தந்தார். அவருடைய மெய்மறந்த நிக்லயைக் கண்டு சூரப்புலி ஆச்சரியத்தோடு அவரையே உற்று நோக்கிக்கொண்டு எதிரில் டுத்திருந்தது. அதன் உள்ளத்திலே பல விதமான எண்ணங்கள் 1ழந்து மறைந்துகொண்டிருந்தன. தனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தை அது நிக்னத்தது. துறவி மிக்கு எற்படக்கூடிய தீங்கையும் கவனியாமல் கரடியை விரட்டித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/70&oldid=840636" இலிருந்து மீள்விக்கப்பட்டது