பக்கம்:சூரப்புலி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7O யெல்லாம் கவனித்தது. புலிகளோடு போரிடுவதற்குத் துணிந்தது. துறவியைப் புலிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒ.ே எண்ணம்தான் அதன் உள்ளத்திலே அந்தச் சமயத்தில் மேலோங்ல் இருந்தது. அதன் அடர்ந்த உரோமம் சிலிர்ப்பதையும், அதன் த:ை நார்கள் முறுக்கேறுவதையும் துறவி கவனித்தார். அடுத்த கணத் தில் குரப்புலி வேகமாக எழுந்து முன் ல்ை பாய்ந்தோடியிருக்கும். ஆல்ை துறவியின் இடக்கை மெதுவாகச் சூரப்புலியின் முதுகிலே பட்டது. பேசாமல் படுத்திரு, கவலைப்படாதே" என்று கூறுவது போல அவருடைய இடக்கை நடுவிரல்கள் மூன்றும் சூரப்புலியின் முதுகில் இலேசாகத் தட்டிக்கொடுத்தன. அவருடைய இடக்கை யின் அசைவோ விரல்களின் அசைவோ வெளியில் தெரியாதவாறு அவ்வளவு நளினமாகத் துறவி தமது விருப்பத்தைச் சூரப்புலிக்குத் தெரிவித்தார். சூரப்புலியும் அதைத் தெரிந்துகொண்டது. முன்னுல் படுத் திருந்தவாறே மெதுவாகத் தலையைச் சற்றுத் திருப்பித் துறவியை உற்று நோக்கிற்று. அவருடைய முகத்திலே கவலேயோ அச்சமோ ஒரு சிறிதும் தென்படவில்லை. இதழ்களில் அரும்பி யிருந்த புன்னகை கொஞ்சம்கூட மாறவில்லை. கண்கள் பழையபடியே இயற்கையமுகில் லயித்திருந்தன. சூரப்புலி தன் உள்ளத்திலே தோன்றிய கவலையை மறந்தது. என்ன நேர்ந்தாலும் துறவியின் கட்டளையின்படியே நடப்பதென்று தீர்மானித்துப் பேசாமல் படுத் திருந்தது. அதன் கண்கள் மட்டும் புலிகளேயே மாருமல் உற்று நோக்கிக்கொண்டிருந்தன. துறவியையும் சூரப்புலியையும் கண்டவுடன் சட்டென்று நின்ற புலிகள் இப்பொழுது ஆற்றை நோக்கி அடியெடுத்து வைத்தன. ஒடும் நீரிலே நடந்தன. மகிழ்ச்சியோடு ஆற்று நீரிலே விளையாடின. துறவியையும் நாயையும் அவை முற்றிலும் மறந்துவிட்டனபோல் தோன்றியது. வெகுநேரம் நீரிலே விளையாடிக் களித்துவிட்டுத் துறவி இருந்த பக்கமாக ஆற்றின் கரையிலேறி மரக்கூட்டங்களுக் கிடையில் புகுந்து அவை மறைந்துவிட்டன. சூாப்புலிக்கு உண்டான ஆச்சரியத்திற்கு அளவே இல்லை; போரிட்டிருந்தால் புலிகளை நிச்சயமாக வெல்ல முடியாது என்பது அதற்கு நன்ருகத் தெரியும். இருந்தாலும் துறவியைக் காப்பதற்காக அது தன் கடமையைச் செய்ய வேண்டுமென்று முன்பு கருதி யிருந்தது. தனது பலத்தைவிட மிக மேலான பலம் துறவியிடம் இருக்கிறதென்று அதற்கு இப்பொழுது தெரிந்தது. துறவியினுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/73&oldid=840639" இலிருந்து மீள்விக்கப்பட்டது