பக்கம்:சூரப்புலி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலம் அவருடைய அன்பினுல் ஏற்பட்டது. தமது உடம்பைப்பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாமல் அன்புமயமாக இருக்கின்ற துறவியின் பெருமையைச் சூரப்புலி அந்த நிமிஷத்தில் எப்படியோ உணர்ந்தது. மனிதர்களுக்கும் எட்டாத அந்த உண்மை அதற்குத் தெரிந்து விட்டது. அதனால் அது தன்னேயே துறவியிடம் முழுமையாக அர்ப்பணம் செய்துவிட்டது. விளக்க முடியாத ஒரு பெரிய இன்பக் கிளர்ச்சியோடு அவருடைய முகத்தைப் பார்த்துத் தன்னே மறந்தது. மெதுவாகத் தனது தலையை அவருடைய பாதங்களிலே வைத்தது. சூரப்புலியின் உணர்ச்சிகளையெல்லாம் உணர்ந்தவர்போல அதை அன்போடு தலையிலிருந்து உடம்பு முழுவதும் ஒருமுறை துறவி தடவிக் கொடுத்தார். மேற்கிலே உயர்ந்து நிற்கும் மல்ேகளுக்குப் பின்னல் முழுநிலா மறைகின்ற தருணத்தில் துறவி அருவியைவிட்டு ஆசிரமத்திற்குப் புறப்பட்டார். சூரப்புலி அவரைத் தொடர்ந்து சென்றது. அந்த இரவு முதல் சூரப்புலியின் வாழ்க்கையில் மற்ருெரு புதிய மாறுதல் தோன்றலாயிற்று. உணவிற்காகக் காட்டுப் பிராணிகளைக் கொல்லுவதைக் கொஞ்சங்கொஞ்சமாக அது தவிர்த்துவிட்டது. ஆசிரமத்தில் சீடர்கள் தயாரிக்கும் உணவையே அது விரும்பி உண்டது. துறவிக்கு எது விருப்பமோ அதுவே தனக்கும் விருப்பமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/74&oldid=1276976" இலிருந்து மீள்விக்கப்பட்டது