பக்கம்:சூரப்புலி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரப்புலிக்கு அடுத்த வேக்ாயில் உணவு கிடைத்தது. தெரு வழியாக ஓடினல் அதுகூடக் கிடைக்காதே ! மேலும், வெளியிலே சென்று எச்சில் இலகளுக்குக் காத்திருப் பதை அது வெறுத்தது. அது இழிவான காரியம் என்று அதற்கு நன்ருகத் தெரிந்திருந்தது. சூரப்புலியின் தாய் ஒரு சாதாரண நாட்டு நாய்தான். ஆடுகளே இரவு நேரங்களிலே அடைத்து வைக்கும் பட்டியைக் காப்பது அதனுடைய வேலே. அதைப் பட்டி நாயென்றும் சொல்லுவார்கள். உருவத்திலே சிறியதாகவும், பார்ப் பதற்கு அதிகமான அழகில்லாததாகவும் இருந்தாலும் அது பட்டியைக் காப்பதிலே திறமை வாய்ந்தது. இருட்டிலே திருட்டுத்தனமாகப் பட்டிக்குள்ளே நுழைய வரும் குள்ளநரிகளை எதிர்த்துப் போராடக் கூடிய வலிமை அதற்கு இல்லாவிட்டாலும் அது ஏமாருமல் நரி வருவதை முன்னலேயே கண்டுபிடித்துப் பெரிய சத்தத்தோடு குரைக்கும். அந்தச் சத்தத்தைக் கண்ட நரி ஓடிவிடும் ஆட்டுப் பட்டியில் தூங்கிக்கொண்டிருக்கும் ஆட்டுப் பட்டிக்காரனும் விழித்துக் கொள்வான். சூரப்புலி இளங்குட்டியாக அதன் தாயோடு இருக்கும் காலத்திலே, ஒருநாள் இரவு, பவானியாற்றிலே திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்தது. நீலகிரி மலையிலே மழை கொட்டு கொட்டென்று கொட்டிற்று. அதல்ை வெள்ளம் பெருக்கெடுத்து இரண்டு கரைகளையும் உடைத்துக்கொண்டு, மேய்ச்சல் நிலமெல்லாம் பாய்ந்தோடிற்று. அந்தச் சமயத்தில், ஆட்டுப்பட்டி பவானியாற்றின் கரைக்கு அருகிலே ஒரு வயல் வெளியில் இருந்தது. வெள்ளம் வருகிறதைப்பற்றிப் பட்டிநாய் எப்படியோ அறிந்துகொண்டு, எச்சரிக்கை செய்ய முயன்றது. குரைத்துக் குரைத்து முன்னும் பின்னும் ஒடி ஒடிக் காண்பித்தது. ஆனல், ஆட்டுக்காரன் அதன் பொருளே உணர்ந்துகொள்ளவில்லே. அன்று அவனுக்கு நல்ல தூக்கம். முதல் நாளிரவு அவன் கூத்துப் பார்க்கப் போயிருந்தான் அதல்ை, அன்று அவனுக்கு நல்ல தூக்கமில்லே. பட்டிநாயின் எச்சரிக்கையைக் கவனியாமல் அவன் தூங்கிவிட்டான். வெள்ளம் கொந்தளித்து வேகமாகப் பாய்ந்தது. பட்டிநாய் தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/8&oldid=840646" இலிருந்து மீள்விக்கப்பட்டது