பக்கம்:சூரப்புலி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அவருடைய பெருமையை அறிந்த அந்த மக்களைப் பார்த்து அது ஆச்சரியமடைந்தது. அதல்ை அது மிகுந்த மகிழ்ச்சியோடு பக்கத்திலே நடந்தது. குதிரைக்காரன் இவற்றையெல்லாம் கவனி யாமல் தலையைச் சொறிந்துகொண்டு குதிரையை நடத்தி வந்தான். அல்மோராவைவிட்டு வெளியே வந்ததும் ஒற்றையடிப்பாதை ஒன்று தென்பட்டது. அதிலே நடந்துதான் செல்ல முடியும். வண்டிகள் போக முடியாது. மைல் கணக்காக எங்குப் பார்த்தாலும் ஓங்கி வளர்ந்திருக்கும் பைன் மரங்கன் தோன்றின. அந்த மரங்களிலிருந்து எடுக்கும் தைலவாசன வீசிக்கொண்டிருந்தது இவ்வாறு சுமார் எட்டு மைல் நடந்து பரிச்சீனு என்ற இடத்தைத் துறவி அன்று மாலே அடைந்தார். இரண்டு பள்ளத்தாக்குகளுக்கு இடையிலேயுள்ள ஒரு மேட்டுப் பாங்கான பகுதியைச் சீனு என்று அழைப்பார்கள். கனேரிச் சீன, கணுய், பெரிநாகு இவைகளெல்லாம் அடுத்து வருகின்ற இடங்கள். அங்கெல்லாம் சிறுசிறு ஊர்கள் உண்டு. வழி குறுகலாகவும் எறியும் இறங்கியும் சென்றது. ஊரைக் கண்டவுடனே குதிரைக் காரன் துறவிக்குத் தொந்தரவு கொடுக்கத் தொடங்கிவிடுவான். அவனுக்கு வெகுமதி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். முதலில் கெஞ்சுவான்; பிறகு, "நான் திரும்பி அல்மோராவுக்குப் போய்விடுவேன்” என்று பயங்காட்டுவான். துறவி அவன் கேட்டபோதெல்லாம் இனம் கொடுத்துக் கொண்டே வந்தார். அவர் கொடுத்த தொகையைக் கணக்கிட்டுப் பார்த்தால் அவனுக்கு ஆஸ்கோட் என்ற ஊர் வரையிலும் செல்லு வதற்குப் பேசிய கூலியைவிட அதிகமாக இருக்கும். இவ்வாறு வெகுமதி கொடுக்கின்ற துறவியை அவன் பாராட்டியதாகத் தெரிய வில்லை. இவருக்கு ஒன்றும் தெரியாது; இவரை விருப்பம்போல ஆட்டி வைக்கலாம்” என்று அவன் நினைத்தான். பெரிநாகிலிருந்து தால் என்ற ஊர் வரையிலும் பத்து மைல் நடக்க வேண்டும். அந்தப் பத்து மைலேயும் கடப்பது சுலபம். ஆல்ை தாலிலிருந்து டிட்டிஹட் வரையிலும் கடுமையான ஏற்ற முண்டு. அதல்ை குதிரைக்காரன், தாலுக்கு மேல் வரமுடியாது. குதிரை களைத்துப் போய்விட்டது” என்று பிடிவாதமாகப் பேச ஆரம்பித்தான். துறவி கொடுத்த வெகுமதியை வாங்கிக்கொண்ட பிறகே இப்படி அவன் சொன்னன். துறவி அவனைச் சமாதானப் படுத்த முயலவில்லை. "அப்பா, உன்னல் அங்கே வர முடியாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/85&oldid=840652" இலிருந்து மீள்விக்கப்பட்டது