பக்கம்:சூரப்புலி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மீண்டும் சூரப்புலியை ஆற்றில் விட்டார்கன். சூரப்புலி அவ களுடைய கருத்தை நன்ருகப் புரிந்துகொண்டது. மறுபடியும் உற்சாகமாக வெள்ளத்தை எதிர்த்து நீந்தியது. இந்த முறை அதற்கு வெற்றி கிடைத்துவிட்டது. துறவியின் கையில் அகப்படுமாறு அதல்ை நீந்திச் செல்ல முடிந்தது அதற்குள்ளே அது மிகவும் சோர்வடைந்துவிட்டது. பாறைகளில் மோதிக் கன்னப் பகுதியிலே நல்ல அடியும் பட்டிருந்தது. ஆனல் எப்படியோ சமாளித்துக்கொண்டு துறவியை அது அடைந்து விட்டது. சூரப்புலி அங்கு வந்து சேருவதற்குள் பாறை மீது வெள்ளம் முழங்கால் அளவிற்கு வந்துவிட்டது. துறவி பாறைமீது நின்று சமாளிப்பதே பெரும் சிரமமாக இருந்தது. அந்த நிலயிலே சூரப் புலியைக் கண்டார். கயிற்றைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று கரையில் நின்ற மூவரும் ஒரே மூச்சில் கூவினர்கள். கெளரிமாதா' என்று சொல்லிக்கொண்டே துறவி கயிற்றைப் பிடித்தார். மறு நிமிஷத்திலே அன்னேயின் நினைவிலே அவர் உலகத்தை மறந்தார். கரையிலிருந்ந ஆசிரமவாசிகள் மூவரும் சேர்ந்து கயிற்றைக் கெட்டியாகப் பிடித்து நின்ருர்கள். அவர்களுடைய பலத்தையெல்லாம் சோதிப்பதுபோல வெள்ளம் இழுத்தது. பக்கத்திலிருந்த ஒரு மரத் தோடு கயிற்றை அணத்துப் பிடித்துக்கொண்டு மெதுவாக இழுத் தார்கள். வெள்ளத்தின் வேகமே துறவியையும் சூரப்புலியையும் கரைப்பக்கமாகத் தள்ளலாயிற்று. கரைக்குப் பக்கமாக வரவர இழுப்புக் குறைவதால் கரையில் இருப்பவர்களுடைய முயற்சி ஓங்கி விட்டது. அவர்கள் உற்சாகத்தோடு இழுத்தார்கள். துறவி சூரப்புலியோடு கரையை யடைந்தார். ஆனல் அந்த நிலையிலும் அவர் தியானம் கலேயவில்லை. அன்னேயின் திருவினயாடல் எண்ணிக் களித்த அவருடைய உள்ளம் அன்னேயின் நினைவிலேயே ஒன்றி யிருந்தது. கைமட்டும் கெட்டியரகக் கயிற்றைச் சுற்றிப் பிடித் திருந்தது. சூரப்புலி வெள்ளத்தை எதிர்த்துப் போராடியதால் உணர்வற்ற நிக்லயில் இருந்தது. குரப்புலியின் சோர்வை அகற்றுவதற்காக இரண்டு நாட்கள் ஜலஜீவி ஆசிரமத்திலேயே தங்கவேண்டியதாயிற்று. பிறகு துறவி கயிலாபகிரியை நோக்கித் தமது யாத்திரையைத் தொடர்ந்தார். பலவக் கோட்டையைக் கடந்து டார்ச்சுலாவை நோக்கி துறவி நடக்கலாஞர். இந்தப் பகுதியிலே பெரிய ஏற்றங்களோ இறக்கங்களோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/95&oldid=840663" இலிருந்து மீள்விக்கப்பட்டது