பக்கம்:சூரப்புலி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மில்லே, சில இடங்களிலே ஓடையின் நடுவில் பெரிய பெரிய கற் களேப் போட்டு வைத்திருப்பார்கள். அவற்றின் மேலே நடந்து ஓடையைக் கடக்கலாம். ஆளுல் இந்த ஓடைக்கு அம்மாதிரி கல்பாலமும் இல்லை. துறவி ஒ ைட யி ன் கரையோரமாகவே கொஞ்ச தூரம் நடந்தார். மறுபடியும் வெள்ளத்திலே அகப்பட்டு ஆபத்துக்குள்ளாவாரோ என்று சூரப்புலி கவலே படைந்தது. வெள்ளம் தணியும் வரையில் அங்கேயே காத்து இருக்கலாம் என்று கூறுவதுபோல நடந்துகொண்டது. அங்கேயே இருந்தால் கொஞ்ச நேரத்திற்குள் இருள் பரவிவிடும். தங்குவதற்கு வசதியாக மலேக் குகையோ வேறிடமோ இல்லே. அதல்ை துறவி கரையோரமாகவே சுமார் அரை மைல் நடந்தார். ஓரிடத்திலே ஓடையின் இரண்டு கரைகளுக்கும் இடையிலே உயரமாக நின்ற பாறைகளே ஒன்று சேர்ப்பதுபோல ஒரு பெரிய கயிறு கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஒடையின் அகலம் சுமார் நூற்றைம்பது அடியிருக்கும். பாறைகளுக்கிடையே 200 அடி ஆழத்தில் வெள்ளம் பயங்கரமாக ஓசையிட்டுக்கொண்டு ஓடிற்று. துறவி அந்த இடத்திற்கு வந்ததும் பாறையிடுக்குகளிலே வளர்ந்திருந்த நீளமான மக்லப்புல்லேப் பிடுங்கி வந்தார். அப்புல்லேக் கொண்டு இரண்டு கயிறுகள் திரித்தார். ஒரு கயிறு குட்டையானது. ஆல்ை அதைக் கையளவு பருமன் உள்ளதாகச் செய்தார். மற்ருெரு கயிற்றைப் பெருவிரல் கனத்திற்கு வெகு நீளமாக இருக்கும்படி செய்தார். முதலில் தம் முதுகின் மேலிருந்த மூட்டையை ஓடைக்கு மத்தியில் தொங்கிக்கொண்டிருந்த பெரிய கயிற்றில் தொங்குமாறு கட்டி வைத்தார். அவர் திரித்த நீளமான சிறிய கயிற்றின் ஒரு துனியை மூட்டையின் மேல் பாகத்திலே நன்ருகக் கட்டி வைத்தார். பிறகு கவையாகப் பிரிந்துள்ள ஒரு கெட்டியான மரக்கிளேயை ஒடித்து வந்தார். அதை ஒழுங்கு செய்வதற்கு அவரிடத்தில் இருந்த சிறிய கத்தியைத் தவிர வேறு கருவியில்லை. அதைக்கொண்டே மெது வாகச் சீவிக் கவையை ஒழுங்குபடுத்தினர். கவைப்பகுதியை ஒடையின் குறுக்கே கட்டியுள்ள கயிற்றிலே வைத்து அதன் இரண்டு நுனிகளையும் ஒன்ருகச் சேர்க்குமாறு தாம் திரித்த கனமான கயிற்றை உறுதியாகக் கட்டினர். அந்தக் கவை ஒடையின் மத்தியில் இருக்கும் பாலக் கயிற்றின் மேலும், திரிக்கப்பட்ட கயிறு அதன் இரு பக்கங்களில் தொங்கும் ஊஞ்சல்போலவும் அமைந்தன. தொங்கும் கயிற்றிற்குள்ளே புகுந்து கவைப்பகுதி கயிற்றின் மேலேயிருக்கு மாறும் தம் முதுகிலே புல்லால் திரித்துத் தயாரித்த கயிறு இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/97&oldid=840665" இலிருந்து மீள்விக்கப்பட்டது