உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 உரு பிரிட்டிஷ் ஆக்ட் அதுதான் அரசியல் சட்டமாக வெடுத்தது. 1938ம் ஆண்டில் மத்திய அரசின் அதிகாரங்கள் 59 ஆக இருந்தது. அது மாற்றப்பட்டு இந்திய அரசியல் சட்டமாக உருவாக்கப்பட்டு இன்றைக்கு மத்திய அரசு அதிகாரங்கள் 97 ஆக உயர்ந்தது. 1935ல் மாநில அரசு அதிகாரங்கள் 54. அது மாற்றப்பட்டு 66 ஆகத்தான் உயர்ந்தது. 1935ல் பொதுப்பட்டியலில் 36 அதிகாரங்கள், இப்போது 47 அதிகாரங்கள் கொண்டதாக மாறியிருக்கிறது. அப்போது பொதுப்பட்டியலில் 99 சதவீதம் மத்திய அரசு தலைமையில் உள்ள அதிகாரங்கள் தான், (கன்கரண்ட் லிஸ்ட்) இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிகாரங்கள் எல்லாம் மேலே உட்கார்ந்து கொண்டு மாநிலங்கள் அடிமைகளாக, மாநிலங்கள் அதிகாரத்திற்குட்பட்ட இடங்களாக உரிமை யற்ற இடங்களாக ஆகிக் கொண்டு இன்றைக்குப் பேசு கிறார்கள். இருக்கிற அதிகாரங்களை அரசியல் சட்டத்தின் மூலமாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மாநிலமும் செய்கிற சாதனைகளையெல்லாம் மத்திய அரசுதான் செய்தது என்று தோற்றம் அளிக்கக்கூடிய வகையில் இன்று அரசியல் சட்டத்தை நாங்கள் திருத்தப் போகிறோம் என்று சட்ட அமைச்சரே பேசுகிறார். அப்படிப் பேசுகிற நேரத்தில் நமக்கு நம்பிக்கை பிறக்கிறது. அரசியல் சட்டத்தை திருத்த நீங்கள் முன் வருவீர்களேயானால், மாநிலங்களுக்கு அதிக உரிமைகளை கொடுக்கிற அளவுக்கு. அதிக அதி காரங்களை பெறுகிற அளவுக்கு மக்களோடு அதிகத் தொடர் புடைய மாநிலங்கள் மேலும் வலிமையாக முழுமையாகச் செயல்பட அதிகார உரிமைகளை வழங்குங்கள், அரசியல் சட்டத்தைத் திருத்துங்கள் என்று கேட்கிறோம். எங்களுடைய மாநில சுயாட்சிக் கொள்கையை மனதில் வைத்துக் கொண்டு அரசியல் சட்டத்தைத் திருத்துங்கள் அதைத் திருத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. அதற்கு மாறாக இருக்கிற அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு இருக்கிற அதிகாரத்தையும் மத்தியில் கொண்டு போய் குவித்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு நீங்கள் அரசியல் சட்டத்தைத் திருத்தினால் ஜனநாயகம் மேலும் படுகொலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/122&oldid=1695899" இலிருந்து மீள்விக்கப்பட்டது