உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இல்லாமல் போய்விடும். யாருக்கும் தெரியாமலேயே ஒரு சர்வாதிகார ஆட்சி வந்து விடும். இந்திரா காந்தியம்மையார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வேறு யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிகாரங்கள் அத்தனையும் டெல்லியில் குவிக்கப்பட்டால் சர்வாதிகார ஆட்சியை இந்தியா சந்தித்தாகவேண்டிய சங்கடமான கட்டம் வரும். ஒப்புக் ஆகவேதான், அரசியல் சட்டத்தைத் திருத்தும் நேரம் இன்றைக்கு வந்திருக்கிறது என்று கருதினால் இதுதான் நல்ல நேரம். தி மு. கழகத்தின் கோரிக்கையை பரிசீலிக்கக்கூடிய நேரம். ஆய்ந்து பார்க்கக்கூடிய நேரம். அதுபற்றி கலந்து பேசக்கூடிய நேரம். விவாதிக்கக்கூடிய நேரம்-விவாதித்து நல்ல முடிவு எடுக்கக்கூடிய நேரம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி இதை திராவிட முன்னேற்றக் கழகம் மாத்திரமல்ல காங்கிரஸ் கட்சியே ஒரு நேரத்தில் சொன்னது. அருமைத் தலைவர் பண்டித ஜவஹார்லால் நேரு அவர்களே ஒப்புக்கொண்டது. அபுல்கலாம் ஆசாத் ஏற்றுக் கொண்டது. கொண்டது. சுயாட்சி கேட்க காந்தியடிகள் வேண்டும் என்று சில கோரிக்கையை இன்றைக்கு மறுக்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய தேர்தல் பிரகடனத் திலே ஒப்புக்கொண்டது. 1943ல் அந்தக் கட்சியினர் செயற் குழுவும் பொதுக்குழுவும் நிறைவேற்றிய தீர்மானம் "பிரிந்து போகும் உரிமைகளோடு கூடிய மாநில சுயாட்சி இந்தியா வுக்கு அளிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங் களுக்கு அளிக்க வேண்டும். என்று 43லே கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதைத்தான் நிறைவேற்றுகிறோம். அதைத்தான் கேட்கிறோம். அதைத் மாநில சுயாட்சிக்கு வலியுறுத்துகிறோம். அந்த இன்றைக்கு திமுக. ஒளிவிளக்கு ஏற்றுகிறது. மேலும் அதிகாரங்களை அங்கே கொண்டுபோய் குவிக்கிற சூழ்நிலை இல்லாத அளவுக்கு அவசர சட்டத்தை எவ்வளவு விரைவில் இந்திரா காங்கிரஸ் திரும்பப் பெற வேண்டுமென்ற எங்கள் கோரிக்கையையும் இந்த மாநாட்டில் எடுத்து வைக்கின்றேன். தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/123&oldid=1695900" இலிருந்து மீள்விக்கப்பட்டது