உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பைதையும் இந்த இருக்க முடியாது...... 12 நேரத்தில் எடுத்துக்காட்டாமல் கே. டி. கே. தங்கமணி:- “சர்க்கரை விலை சம்பந்தமாக, 'லெவி சர்க்கரை' என்றும், 'லெவிக்கு அப்பாற்பட்ட சர்க்கரை' என்றும் இருப்பது சரியல்ல என்பது எங்க ளுடைய நிலை; 'லெவி' சர்க்கரைக்கு விலை நிச்சயிக்கும் நேரத்தில், தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம் ஆகிய மாநிலங்களுக்கு அதிகமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது; பொதுவாக, ஒரே விலை இருக்க வேண்டும் என்ற நிலையை அரசு இங்கே எடுக்குமானால், அதை ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.' முதலமைச்சர்:- “நான் இதை மகிழ்ச்சியோடு வரவேற் கிறேன்; இதுபற்றி நான் முதலில் சொல்லும்போது, தங்கமணி அவர்கள் நிதானமாக-நியாங்களை உணர்ந்து பேசினார்கள்' என்று சொன்னேன்... பி. சீனிவாசன்:- 1- “மத்திய அரசு அந்தக் கோரிக்கையை நிராகரிக்க ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என்ன காரணம் சொல்கிறார்கள்?" முதலமைச்சர்:- "இப்போதுதான் காரணங்களே எதற்கும் கேட்கக்கூடாதே!" தலைவர் அவர்களே! கடுமையான வறட்சி நேரத்தில் கூட. தமிழகத்தில் உள்ள மொத்தம் 98 இலட்சம் குடும்பங் களில் 2 இலட்சம் குடும்பங்களுக்கு நாம் போதிய அளவு தர முடியாவிட்டாலும், ஒரளவு அரிசியை வழங்க முயற்சிகளை மேற்கொண்டோம்; அதற்கு நாம் எடுத்த நடவடிக்கை யாகத் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கும் கார்ப்ப ரேஷன் சார்பிலும்-கூட்டுறவுச் சங்கங்கள் சார்பிலும் உள்ளாட்சி மன்றங்கள் சார்பிலும் நடத்தும் சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் -9,926 நிலையங்களின் மூலம் 52 இலட்சம் குடும்பங்களுக்கு நாம் அரிசி வழங்கும் ஏற் பாட்டைச் செய்து முடித்தோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/136&oldid=1695913" இலிருந்து மீள்விக்கப்பட்டது