உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 நகர்ப் பகுதியில் ஐநூறு ரூபாய்க்குமேல் வருமானம் உள்ளவர்களுக்கு மாதம் ஒன்றுக்குப் பத்து கிலோ அரிசி- சென்னை, கோவை ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வந்தது; அதை இப்போது இருபது கிலோவாக உயர்த்தி யிருக்கிறோம்; அதோடு மாத்திரமில்லாமல், திருச்சி - சேலம் ஆகிய நகரங்களுக்கும் இந்தத் திட்டத்தை முதல் கட்டமாக நாம் நிறைவேற்றியிருக்கிறோம்! தலைமையமைச்சர் அறிவித்த முதல் அம்சத்திற்கு நான் அளித்த விளக்கம் இது! நிலமற்றவர்களுக்கு நில விநியோகம் " நமது இரண்டாவது அம்சமாக மக்களில் மிகப் பெரும்பாலோர் கிராமப் பகுதிகளில் வாழ்கின்றனர்; நில உச்ச வரம்புச் சட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தி- சிலரிடம் உபரியாக இருக்கும் நிலங்களை எடுத்து நில மற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்; நில உடைமை ஆவணங்களைத் தயாரித்து முடிப் பதில் உள்ளூர் மக்களின் உதவி நமக்குத் தேவை யாகும்" என்பதாகும். தலைமையமைச்சரின் இந்த இரண்டாவது அம்சத்தின் படி, உபரி நிலத்தை நாம் எவ்வளவு எடுத்து வழங்கியிருக் கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். “நூறு புதிய சாதனைகள்” என்று ஒரு புத்தகம் போட் டிருக்கிறார்கள்; அதில் இந்த விவரம் தவறாக இருக்கிறது; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கூட, 'பத்து இலட்சம் ஏக்கர் நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது' என்று சொல்லி யிருக்கிறார்கள்; அப்படிப் பத்து இலட்சம் ஏக்கர் விநியோ கிக்கவில்லை; அது இயலாததும்கூட! 6.4 அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு தமிழ் நாட்டில் பத்து இலட்சம் ஏக்கர் நிலத்தை விநியோகித்திருக்கிறார்கள்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/137&oldid=1695914" இலிருந்து மீள்விக்கப்பட்டது