உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கின்ற நேரத்தில் கொஞ்சம் வேகமாக இந்திரா காந்தி அவர் களைத் தாக்கி பேசியதை நாங்கள் கேட்டோம். நீங்களும் கேட்டீர்கள். அந்த நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்வேன், அவர்கள் சொற்பொழிவாளர்களாக இருந்தாலும், அல்லது கலை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களாக இருந்தாலும் சரி, எழுத்தாளர்களாக இருந்தாலும், நமது கழகத் தோழர் களுக்குச் சொல்லிக் கொள்வேன், கொள்கைகளை இலட்சியங் களை எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் விமர்சிக் கலாம்; ஆனால் இந்தியப் பிரதமரைப் போன்ற ஒருவரை அல்லது வேறு கட்சியின் தலைவர்களை நாம் விமர்ச்சிக்கிற நேரத்தில் அண்ணா கற்றுத்தந்த நம்முடை பேச்சுத் தரம் நம்முடைய எழுத்துத் தரம் கிஞ்சிற்றும் ஊனமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று நம்முடைய கழகத் தோழர்கள் கொஞ்சம் ஆவேசமாகப் பேசியவர்கள்- கொஞ்சம் வாய் தவறிப் பேசியவர்கள் அவர்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்திரா காந்தி அம்மையாரைப் பற்றி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தனிப்பட்ட முறையில் எந்த விதமான பசையும் கிடையாது. இன்றைக்கு ஏற்பட் டிருக்கிற மாச்சரியங்கள் எல்லாம் இன்றைக்கு ஏற்பட் டிருக்கிற வேறுபாடுகளெல்லாம் இந்தியாவின் இயல்பான சூழ்நிலைக்கு மாறாக இன்றைக்கு நாட்டிலே ஏற்பட்டிருக் கிறது. அது மாற்றப்பட்டு மீண்டும் இயல்பான சூழ்நிலை வரவேண்டும் என்று கேட்கிறோம். ஜெயப்பிரகாஷ் விடுதலை பெற்றிருக்கிறார். நாவலர் குறிப்பிட்டதைப் போல அவர் விடுதலை பெற்றபிறகுதான் சிறையிலிருந்தார் என்று பல று பேருக்குத் தெரிகிறது. மொரார்ஜி தேசாய் சிறையிலிருக் கிறார். அசோக் மேத்தா சிறைச்சாலையிலிருக்கிறார். இந்த நாட்டினுடைய விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள் பழம்பெரும் தலைவர்கள், இவர்களெல்லாம் இன்றைக்கு சிறைக்கொத்தடியிலே அடைபட்டிருக்கிறார்கள். பாரதியார் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/212&oldid=1695989" இலிருந்து மீள்விக்கப்பட்டது