உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ. மண்ணின் இன்பங்களை விரும்பி சுதந்திரத் தின் மாண்பினை இழப்பாரோ. கண் இழந்துவிட்டு சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ" உரிமைக்காக சுதந்திரத்திற்காக அந்தப் புரட்சிப் புலவன் பாரதி அன்றைக்கு எழுப்பிய அந்த எழுச்சி கீதம் இன்றைக் கும் பாடப்படவேண்டிய கீதமாக இருக்கிறதே, இருக்க லாமா? அந்த நிலை இன்றைக்கு இந்தியாவில் உருவாகலாமா? "ஓராயிரம் வருஷம் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணியே போற்றுவோமோ மேலோர்கள் வெஞ் சிறையில் வீழ்ந்து கிடப்பதும் நூலோர்கள் செக்கடியில் நோவதும் காண்கிலையோ இந்த சுதந்திரம் பறிபோகலாமா. இதைத்தான் யாரையும் தூண்டி விடுவதற்காக அல்ல. எந்த கொந்தளிப்பையும் ஏற்படுத்துவதற்காக அல்ல. எந்தக் கிளர்ச்சியையும் உடனடியாக தொடங்குவதற்காக அல்ல. இதை நிதானமாக நெஞ்சத்திலே ஏற்று சிந்தித்து இன்றைக்கு நாடாளக்கூடிய தலைமையமைச்சர் இந்திராகாந்தி அவர்கள் செயல்படவேண்டும். தங்களுடைய முடிவுகளை மாற்றிக் கொள்ளவேண்டும் நிலைமைகளை கவனிக்கவேண்டும் என்று தான் சென்னையில் நாம் நிறைவேற்றிய செயற்குழுத் தீர்மானமானாலும் கடற்கரையில் லட்சோப லட்சம் மக்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியானாலும் நெல்லையில் நாம் வடித்தெடுத்த தீர்மானமானாலும் சேலத்தில் நாம் தந்த விளக்கமானாலும், அறந்தாங்கியில், வேறுபல இடங்களில், இன்றைக்கு இங்கே பேசுகிற பேச்சுக்களானாலும் இந்த மைய இழைக் கருத்துக்களைத்தான் மத்தியிலிருக்கிற இந்திராகாந்தி அம்மையார் அவர்களுக்கு விளக்கிக் கொண்டு இருக்கின்றன. உங்களுக்குத் தெரியும். இந்திராகாந்தி அம்மையார் சொல் கிறார்கள், இந்த அவசர நிலை இன்றைக்கு நாம் எடுத் திருக்கும் நடவடிக்கை கட்டுப்பாட்டுக்காக, ஒழுங்குக்காக. பிள்ளைகளை ஒழுங்காக பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டு மென்பதற்காக. தொழிலாளர்கள் ஒழுங்காக வேலை செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/213&oldid=1695990" இலிருந்து மீள்விக்கப்பட்டது