உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமை வழங்குக அன்பார்ந்த மாநாட்டுத் தலைவர் அருமை நண்பர் கந்தப்பன் அவர்களே. மாநாட்டுத் திறப்பாளர் அருமை நண்பர் ஜார்ஜ் கோமகன் அவர்களே, கழகத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் நாவலர் அவர்களே, கழ சத்தின் பொருளாளர் பேராசிரியர் அவர்களே, தமிழ்நாடு சம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெரியவர் மணலி அவர்களே, அமைச்சர் பெருமக்களே, தலைமைக் கழகத்தின் செயலாளர் களே, அருமைத் தாய்மார்களே. பெரியோர்களே, கழகக் கண்மணிகளாம் என் அன்பு உடன்பிறப்புக்களே! . நெல்லை மாவட்ட தி. மு. கழகத்தின் ஐந்தாவது மாநாட்டில் வெள்ளமெனத் திரண்டிருக்கின்ற உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதிலும், நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என்றாலும், எனக்கு முன்னால் உரையாற்றிய தாவலர் அவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல எங்களோடு வந்து அமர்ந்து. மாநாட்டுப் பணிகளை மேடையில் இருந்த வாறு சுறுசுறுப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிற எங்கள் அருமைத் தலைவர்களிலே ஒருவரான என். வி. என். அவர்கள் இல்லையே என்கிற ஏக்கத்தோடுதான் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளிலே நேற்றும், இன்றும் நாங்கள் கலந்து கொண்டிருக்கிறோம். வேதனைகளுக்கு இடையிலேயும், பல்வேறு சோதனை களுக்கு இடையிலேயும் கடமையைச் செய்ய வேண்டும் என்கிற அறிஞர் அண்ணா அவர்களுடைய பொன்மொழிக் கேற்ப நெல்லை மாவட்டத்தின் மாநாட்டை மாவட்டத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/27&oldid=1695804" இலிருந்து மீள்விக்கப்பட்டது