உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கிறார்கள் என்றாலும், அவர்கள் நேற்றைய தினம், மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய காரணத்தினால்-இந்த மாநாட்டுத் தொகை எவ்வளவு என்பதை அறிவிக்கின்ற அந்த வகையில் மாத்திரம் பொருளாளருடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டு- இந்த மாநாட்டில் கட்டணங்கள் மூலமாகவும் - நன்கொடையின் மூலமாகவும் வசூலான மொத்தத் தொகை ரூ.2,33,500 என்பதையும் (கைதட்டல்), செலவு ரூ.95,000 என்பதையும், செலவு போக 138,500 ரூபாயை நம்முடைய நண்பர்கள் மிகச் சாதுர்யமாக மிச்சப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் பல்வேறு அல்லல்களுக்கு இடையேயும் இரண்டு மூன்று தட்வை இந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டும் கூட சோர்வடையாமல் அவர்கள் ஆற்றிய பணியை பம்பரமெனச் சுழன்று தொண்டாற்றிய பாங்கை-நானும், நாவலரும். பேராசிரியரும், தலைமைக் கழகத்தினரும்-ஏன் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அத்தனை பேரும் நன்றிப் பெருக்கோடு இவ்வளவு சங்கடங்களுக்கிடையேயும் இவ்வளவு திறமையான மாநாட்டை நடத்திக் காட்டுகிறீர்களே என்பதற்காகப் பாராட்டித்தான் தீரவேண்டும். அந்த வகையில் வரவேற்புக் குழுத் தலைவர் கதிரவன், மற்றும் மாநாட்டு நிர்வாகிகள் அனைவரும் நம்முடைய வாழ்த்துதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் என்பதை நான் மீண்டும் மீண்டும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக் கிறேன். இந்த மாநாட்டின் சிறப்புக்களிலே ஒன்றாக- பல நூறு சிறப்புக்களில் ஒரு சிறப்பா அல்லது பத்துச் சிறப்புக்களில் ஒரு சிறப்பா என்றெல்லாம் எத்தனைச் சிறப்புக்களிலே ஒரு சிறப்பு என்று கேட்கின்ற வகையிலே அல்லாமல், இதுவும் ஒரு சிறப்பு என்கின்ற வகையில் இனி வரவிருக்கின்ற பல சிறப்புக்களுக்கு வழிகாட்டத் தக்க சிறப்பு என்கின்ற வகை யில் நம்முடைய நண்பர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் மேத்தா அவர்கள் கழகத்தில் தன்னை மீண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/29&oldid=1695806" இலிருந்து மீள்விக்கப்பட்டது