பக்கம்:சூழ்ச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி 5 அஜேசிங் (ஹீனக்தரவில்) : மந்திரி பிரதானிகளே, நான் இறந்து போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனல் சித்து.ாரை மீட்க முடியாமல் போய்விட்டதே என்று தான் தீராத கவலையாக இருக்கிறது. எனது தாய் பத்மினிக்கு நான் கொடுத்த வாக்குறுதியை கிறை வேற்ற என்னுல் முடியவில்லை......ஹமீர்சிங்...... எங்கே அவன்? (ஹமீர்சிங் எழுந்து அருகே செல் கிருன்.) ஹமீர், என் அருகிலே வா.உனக்கு ஒரு விஷயம் முக்கியமாகச் சொல்லவேண்டும்... அலாவுதீன் சித்துரை முற்றுகையிட்டபோது எனது தங்தை லக்மணசிங் ஏதோ ஒரு காரணத்தால் அலாவுதீனை எதிர்த்துப் போரிட என்னே மட்டும் அனுப்பவில்லை. மற்ற என் தம்பியரும் என் அருமை அண்ணன் ஊர்சிங்கும் சண் டையில் மாண்டார்கள்...தங்தையும் மாண்டார். என்னை மட்டும் இந்தக் காயில்வரத்திற்குப் பத்திரமாக அனுப்பி ஞர்கள். நான் காயில்வரம் வந்து அரசனனேன்...நமது வம்சம் அழியக்கூடாது என்பதற்காகவே நான் ராணு வானேன்...ஆனல் அரசுரிமை உண்மையில் உனக்கே உரியது...தோன் மூத்த மகனகிய என் அண்ணன் ஊர்சிங்கின் புத்திரன். அதனல் உன்னேயே கான் ராணு வாக்குகிறேன்... ஹமீர், சாகும்தறுவாயில் நான் உன்னே ஒன்று கேட்கிறேன். சத்தியம் செய்து கொடுப்பாயா? ஹமீர்சிங் : சிறிய தந்தையே, தாங்கள் என்னே ராணு வாக்கியதால் மட்டும் கான் தங்கள் ஆணையை ஏற்றுக் கொள்வதாகக் கருதவேண்டாம். என்றும் நான் தங்கள் ஆணேயைத் தட்டியதில்லை. இனிமேலும் எனது கடைசி மூச்சு உள்ளவரையும் தங்கள் விருப்பப்படியே கடப்பேன். இது சத்தியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/11&oldid=840670" இலிருந்து மீள்விக்கப்பட்டது