பக்கம்:சூழ்ச்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சூழ்ச்சி சந்தாரா தலைவர் : சொந்தம் ஏற்படுத்திக்கொண்டால் பிறகு எப்படியாவது வசப்படுத்திவிடலாம் என்றுதான் கினேப்பார்கள். சுல்தான்களுடைய தர்பாரின் ஆடம்பரங் களுக்கும், குடி கூத்து முதலிய கவர்ச்சிகளுக்கும் எத் தனேயோ ரஜபுத்திரர்கள் அடிமையாகியிருக்கிருர்கள்: இன்றும் அடிமையாகிக்கொண்டிருக்கிருர்கள். ஹமீர்சிங் : மாமா, என்னையும் அவ்வளவு கேவல மாகவா நினைக்கிறீர்கள்? அஜேசிங்கிற்குக் கொடுத்த வாக்கை மறந்துவிடுவேனென்ரு நீங்கள் சந்தேகப் படுகிறீர்கள் ? சந்தாரா தலைவர் : பெண்களின் வலையில் விழுந்தவன் எதை வேண்டுமானலும் மறந்துவிடுவான். மந்திரி : ராணு, மால்தேவ் தனது பெண்ணேயே உப யோகப்படுத்தி உங்களே மயக்க கினைத்திருக்கிருன். நம் முடைய கோக்கம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டும் வெட்கம் மானமின்றித் தேங்காய்ப் பரிசு அனுப்பு கிறவன் என்ன வேண்டுமானலும் செய்வான். ஹமீர்சிங் : மந்திரி, நீங்கள் மால்தேவைப் பற்றி கினேப் பது சரியாக இருக்கலாம். ஆனல் என்னே நீங்கள் யாரும் சரியாக அறிந்துகொண்டதாகவே தெரியவில்லை. நான் அவ்வளவு எளிதில் அவர்கள் வசப்பட்டுவிடுவேன் என்று நீங்கள் தீர்மானிப்பது என்னே அவமரியாதை செய்வது போலாகும். சேனபதி ; ராணு, தங்கள் சேனேயின் தலைவன் என்ற முறையில் கான் ஒன்று இந்தச் சமயத்தில் கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்த மண விஷயம் தெரிந்தால் நமது வீரர்கள் அதைச் சிறிதும் வரவேற்கமாட்டார்கள். எதிரிக்கு நாம் பணிந்துவிட்டதாகவே எண்ணுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/20&oldid=840679" இலிருந்து மீள்விக்கப்பட்டது