பக்கம்:செங்கரும்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 சோலையும் பொய்கையும் அமைத்தார்கள். இப்படிப் பல வகையிலும் அழகும் சிறப்பும் கொண்ட சிறிய நகரமாக அவ்விடத்தை ஆரிய மன்னர் சமைத்து விட்டார்கள். அந்தப் பாடியில் செங்குட்டுவன் தன் படைகளுடன் புகுந்தான். அங்கே சபை கூட்டிப் போரில் வீரம் பொலியப் போர் புரிந்த வீரர்களைப் பாராட்டிப் பரிசளிக்க எண்ணிஞன். அமைச்சரும் படைத்தலைவரும் வந்த னர். வீரர்கள் குழுமினர்கள். அரசன் உயர்ந்த ஆசனத்தில் அ ம ர் ந் தி ரு ந் தா ன். முதலில் போரில் வீரத்துடன் பொருது உயிரை இழந்தவர் களுக்குச் சிறப்புச் செய்யத் தொடங்கினன். அவர்க ளுடைய மைந்தர்களை அழைத்து அவர்களுக்குப் பரிசு தருவதன் மூலமாக இறந்தவர்களுக்கு நன்றியறிவு காட்டலாம் என்பது அரசன் எண்ணம். ஆகவே அத் தகையவர்களை முதலில் அழைத்தான். + போரில் இறந்து வீரசொர்க்கம் புகுந்தவர்களின் மைந்தர் வந்தனர்; தலையும் தோளும் துண்டிக்கப் பெற்று மடிந்தவர்களின் பிள்ளைகள் வந்தார்கள்; வாட் போர் செய்து மடிந்தவர் மக்களும், உறவினர் மடியத் தாமும் மடிந்தவர்களின் கான்முளைகளும் வந்தனர். அவர்களுக்கு வெற்றிச் சின்னமாகிய பொன்லைாகிய வாகைப் பூவை அணியச் செய்தான் அரசன். பிறகு போரில் வீரங்காட்டி வெற்றி கொண்ட வரை அழைத்தான். வாட்போரில் பகைவர்களை வீழ்த்திய மறவர் பரிசு பெற்றனர். தேர்வீரர்களோடு செய்த போரில் அவர்கள் தேரையும் அவர்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/69&oldid=840807" இலிருந்து மீள்விக்கப்பட்டது