உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ2 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

வரை உலகில் ஏற்பட்ட பூகம்பங்களிலெல்லாம் மிகக்கடு மையானதும் பன்ட்ைகள் டிேத்து காசம் விளைவித்ததுமாகும். இந்தியாவின் சுதந்தா விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த அஸ்ஸாம் மக்கள், சிதறி ஓடினர்கள் கீழே விழாமலிருப்பதற் காகத் தெருக்களில் சென்றவர் ஆங்காங்கே உட்கார்ந்துவிட்ட னர். வீடுகளிலிருந்தவர் வெளியே வந்தனர். இங்கில கடுக்கத் தால் மலைகள் சரிந்தன: ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்துத் திசைமாறி ஓடின : மேடுகள் பள்ளமர்யின : பாலங்கள் சாலை கள் முதலிய போக்கு வரத்து வசதிகள் அழிந்தொழிந்தன ; ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள் : பல்லாயிரம் கால் கடைகள் காசமாயின; அஸ்ஸாமின் பூகோள அமைப்பே மாறி விட்டதெனலாம்.

இத்தகைய கொடிய பூகம்பம் எப்படி ஏற்படுகிறதென் பதற்குப் பல நாட்டு மக்கள், பல கதை கூறுவார்கள். ஜப்பானி யர், பூமிக்கடியில் ஒர் எட்டுக்கால் பூச்சி இருக்கிறது ; அதன் பெயர் ஜிஷின்முவி. அது அசையும் பொழுது தன் மேலிருக், கும் பூமியையும் ஆட்டுகிறது என்பர். மங்கோலியர், பூகம் பம் ஒரு வாத்தால் ஏற்படுகிறதென்றும், அமெரிக்கர் ஒர் ஆமை யால் ஏற்படுகிறதென்றும் கதை கூறினர். ஆனால், விஞ்ஞானி கள் பல ஆண்டுகளாகப் பூகம்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து உண்மைக் காரணத்தை ஒருவாறு அறிந்திருக்கின்றார்கள். முத லில் பூமி தோன்றிய வர்லாற்றைப் பார்ப்போம் :

பல கோடி ஆண்டுகளுக்கு முன் ஞாயிறு தன்னச் சுற்றிக் கிரகம் ஒன்றுமில்லாது தனித்து இயங்கிக்கொண்டிருந்த போது, தீடீரென்று நட்சத்திரம் ஒன்று அதன் அண்மையில் வந்ததாம். அப்போது அவற்றிற்கிடையே ஏற்பட்ட கவர்ச்சி காரணமாக ஞாயிற்றின் சில பாகம் தெறித்தனவாம். அவ் வாறு தெறித்த பகுதிகளில் ஒன்றே நாம் வசிக்கும் பூமி என்று சொல்லப்படுகிறது. ஞாயிற்றினின்றும் தெறித்த இப்பூமி, நெருப்பு மயமாய் நெடுங்காலம் அந்தரத்தே சுழன்றுகொண் டிருக்கும் போது சிறிது சிறிதாகக் குடு ஆறத் தொடங்கியது. இற்றைக்கு 0ே கோடி ஆண்டுகளுக்கு முன் இப்பூமியின் மேலோடு குளிர்ந்திருக்கலாமென விஞ்ஞானிகள் கூறுகின் ருாகள.