உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

கிலப்பரப்பை இடுங்கச் செய்வதோடு கடல் அலே அதிக உயரம் கிளம்பிக் கரையோர ஊர்களை அழித்துவிடும். 1755ல் லிஸ்பன் அருகிலுள்ள கடலில் 80 அடி உயரத்தில் அலேகள் மேற்கிளம்பி அந்நகரத்தின் பல்லாயிர உயிரை இரண்டே கிமிஷத்தில் பலி கொண்டன. இத்தகைய அலை மோதலாலேதான்் காவிரிப்பூம் பட்டினம், மாமல்லபுரம் முதலிய தமிழ் காட்டுத் துறை முகப்பட்டினங்கள் அழிந்தன போலும் இது மற்றொரு காரணம். - -

பூமியில் விரிசல் ஏற்பட்ட இடத்தினின்றும் அதிர்ச்சி அலேகள் தோன்றுகின்றன. அவை இரண்டு வகைப்படும். ஒரு வகை அமுக்க அலைகள் ; இவ்வலைகள் முன் பின்கைச்செல் லும். மற்றொரு வகை குறுக்கலைகள்; இவ்வலேகள் கீழும் மேலு மாகச் செல்லும், அமுக்க அலேகளாலேதான்் முதல் அதிர்ச்சி ஏற்படும். இவ்விரண்டு அலேகள் காரணமாக ஏற்படும் எதிர் அதிர்ச்சி பூமியின் மேற்பரப்பின்மீது பரந்து செல்லும். இவற் றிற்குப் பரப்பு அலைகள் என்பது பெயர். இவ்வலைகள் மெதுவாகச் சென்ருலும் அதிர்ச்சி பலமாய் இருக்கும்.

இங்கிலநடுக்கத்தின் வேகத்தையும் செல்லும் தாரத்தையும் அளந்தறிவதற்கு சில நடுக்கப்பதிவு இயந்திரம் (Seismograph) என்ற கருவியை அமைத்திருக்கிருர்கள். அஸ்ஸாமில் நிகழ்ந்த பூகம்பச்செய்தியை முதன்முதல் டில்லியிலுள்ள நிலநடுக்கப் பதிவு இயந்திரம் அறிவித்தது. பம்பாய்க் கொலாபா கிலேயத் திலுள்ள சிலநடுக்கப் பதிவு இயந்திரம், அஸ்ஸாம் பூகம்ப அதிர்ச்சி வேகத்தால் கெட்டுவிட்டதாம்.

பூகம்பம் எப்பொழுது எங்கு ஏற்படும் என்று முன் கூட்டி அறிவிக்கப்படும் கிலேயில் இன்னும் விஞ்ஞானம் வளரவில்லை. ஆனால், பூகம்பத்தில்ை பெரிய மாளிகைகள்,பாலங்கள்,அணைக் கட்டுகள் முதலியன முற்றிலும்காசமாகா வண்ணம் கிருமாணிப் பதில் விஞ்ஞானிகள் ஒருவாறு வெற்றி கண்டுள்ளார்கள்.