உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பாரதியார் தமிழ்ப் புலமை

(நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார், M. A., B.L.)

சமீபத்தில் காலஞ்சென்ற சி. சுப்பிரமணிய பாரதியார் தங்கிகரில்லாத் தமிழ்ப்புலவர். கமக்கு நெருங்கிய காலத்தவரா கவே, அவர் கவி கலத்தின் உயர்வை உள்ளபடி அளந்தறிவது அருமையாகும். வெறுப்பவரும் கயப்பவரும் நடுவுகிலேயின்றி இவர் இயல்புகளைக் கடையிறந்து காண்பாராவர். நம் கால நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு நவீன ஆதரிசத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு கம்மிடையே பாடும் நம் காலப் புலவர் ஒருவரின் கவிகளை மித மிஞ்சிப் புகழ்வாரும் வெறுத்து மிகப் பழிப்பாரும் பலராவர் : ஆனால், இத்தகைய புலவரின் கவிகளை, கவி கலம் அறிவதன்றி வேறு கோக்கங்கொள்ளாது, தம் உணர்வைக் கவரவிடாது படிப்பதும், படித்து அவற்றின் இயல்பை அளந்தறிவதும் மிகச்சிலர்க்கே ஆவனவாகும். கடுமை நல்லறிவாளர், பாரதியா ரது கவித்திறம் அறிந்து கூறும் ஈய உரைகள் காணும் வரை, மற்ற வர் இப்புலவர் கவிதை கலம் காண முயல்வது தவறென் பது தகாதன்ருே ஆன வரை இத்தமிழ்ப் புலவர் கவி கலத்தை ஆராய்வோம் :

இவர் பாக்கள், கருத்துக்களை வருத்தமின்றி விளக்கும் பண்டைப் பாவலர் பளிங்கு நடை பயின்று, இளகி ஒளிரும் வெண்பொன் ஒழுக்கும், இனிய ஓசையும், திட்பமும், சுவையும் உடையன. இப்புலவர் நூல்களைப் படிப்பவருக்கு நிகண்டு அகராதிகள் வேண்டா , கள்ளமற்ற உள்ளமும், ஊன்றிய கவ னமும், தமிழில் ஆர்வமும் உடையாருக்கு இப்புலவர் இதயம் வெள்ளிடை மலேயாம், எளிய இனிய இவர் கவி கடை, ரொ ழுக்கு உடையதேனும், வயிரத்தின் திண்மையும் ஒளியும் பெற்று கிற்கும்.

நீலத் திரைக்கடல் ஒரத்தி லே நின்று

நித்தம் தவஞ்செய் குமரியெல்லே-வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு, மாலைப் பொழுதி லொரு மேடையிசையே

வானேயும் கடலையும் நோக்கிஇருந்தேன்; மூலைக் கடலினே அவ் வானவளை யம்

முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல்கண்டேன்."