உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

இனைய உருகுபொன் ஒழுக்குடைய ஒப்பற்ற இனிய அடிகளைப் படிக்குக்தோறும் காவும்,கேட்குந்தோறும் செவியும் இனிக்கும்.

அலங்காரங்களுக்கெல்லாம் தாயான உவமையைக் கையா ளுவதில் இப்புலவர் பண்டைப் பாவலர் பலருக்கும் இளையாத வர் இக்காலத்தில் இணையற்றவர். வருந்தித்தேடிப் பொருக் தச் செய்யும் புலவர் பெருமுயற்சியை, நன்றி மறவாது சுமந்து காட்டும் பல புலவர் அணிகளைப்போலன்றி, பாரதியாரின் உவ மைகள், இயற்கையினின்று இவர் வாக்கைத் தேடி வந்தடை யும். கருத்துக்குப் பொருத்தம் உடைமையோடு, கேட்போர் மனத்தில் பதிந்து மறையாது உறையும் செவ்வி உடையவாம் இவர் உவமை அனைத்தும், இயற்கையினின்று எளிதிலெடுத் துத் தம் கவிதை அமுகருத்தி இவராளும் உவமைகள், இப் புலவர் கற்பனைத்திறனையும், ஒப்புணர் தேர்ச்சியையும் கவி வனே கைவினே முதிர்ச்சியையும், அகாயாச ஆட்சியையும், இனிது காட்டும். பழம்பாட்டுக்களைத் துருவி, பண்டை உவமைகளே உருவி, தம் புலமை கிறுவக் கருவியாக்கும் இழி செயலே அறவே வெறுத்தவர் இப்புலவர்.

தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச் சிறப்பை மறந்து விட்ட பூவும், வான மறந்திருக்கும் பயிரும்-இந்த

வையம் முழுதுமில்லே தோழி !' * கண்ணன் முகமறந்து போனுல்-இந்தக்

கண்கள் இருந்து பயன் உண்டோ?

என வருவன பல உவமைகளையுங் காண்க. உவமான உவமேய இயைபுகளும், அவைகளின் அழகும், கவிகளில் இவற்றின் அமைப்பும் விசதமாக எடுத்து விரிப்பதான்ால், இவற்றிற்கே பல வியாசங்கள் வேண்டும். கேவலம் பண்புகளேயும் மனே பாவ எண்ணங்களையுமே உருவகப்படுத்தி, அவற்றின் உதவி கொண்டு, தம் கோள் கிறுவுதலில் இவர் கைவந்த சமர்த்தர்.

இவரைக் குற்றமற்ற மதுரகவி என்னலாம். இவர் சித்திர கவிக்கு மித்திரரல்லர். பண்டை முறைப்படி விஸ்தாரப்படுத்தி யாதொரு நூலுஞ் செய்ய இவர் விரும்பினதாய்த் தெரிய வில்லே. வெளி வந்த பாஞ்சாலி சபதம் ஒத்த சில சிறு காவி