உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் தமிழ்ப் புலமை

பங்களேயும், அச்சேருத சேற்றுார் உாை அன்ன சில ஒரு துறைக்காதற்பனுவல்களையும் இவர் செய்ததுண்டு. இவர் இயற்றிய ஒரு பொருள் துதலிய பல துறைக் கோவைகளில், கண்ணன் பாட்டும், சுதேச கீதங்களுமே திலே கின்ற சிறப் புடையனவாம். கவிதொறுங்கனியும் தேனும், அடிதொறுங் கமழுங் கண்டும் தெவிட்டாத சுவை தருவனவாகும்.

பண்டு தொட்டுப் பாவலர் நால்வகைப் பாவிலும் இயற்றி புள்ள பனுவல்கள் ஆயிரக் கணக்கானவை. திருத்தக்க தேவ ரும், கம்பரும் விருத்தப்பாவை வீறு பெறச் செய்தது முதல், பிந்திய புலவரெல்லாம் பாக்களின் பண்பையும் பயனேயும் அறவே மறந்து, விருத்தப்பா இனத்திற்கே அரசுரிமை தந்து வைத்தார். விருத்தமல்லாப் பல துறைப் பாவினங் கொண் டெழுந்து, விழுமிய தனிப்பனுவலாகப் புலவர் போற்றுவது, தற்கால உலகில் கவிங்கத்துப்பரணி ஒன்றே. இங்கிலேயில் தமிழகத்தெழுந்த கம் புலவர், தனிப்பாசுரங்களால் தலேரின்ற தம் கவித் திறத்தை எவ்வகைப்பாவினுங்காட்டவல்லராயினும், தாம் தொகுத்த பனுவல்கள் பலவும் இசையோடு பாடத்தகும் பாவினப் பாட்டுக்களைக்கொண்டே செய்து அமைத்து வைத் தார். நம் கவிஞரின் புதுக் கருத்துக்களுக்கும், நாடு மொழி மதங்களோடு குறுகாமல் மக்கள் நலத்தோடு விரிந்த விசால கோக்கத்துக்கும், உலக முழுதும் பரந்து வந்து நமது காட்டை யும் இடக்கும் புதுக்கிளர்ச்சிக்கும் மிகுந்த பொருத்தம் உடைய தாகத் தம் கவி உள்ளம் கனிந்துருகி அலேக்தெழும் உணர்வு வெள்ளத்தை வழிப்படுத்தித் தமிழ்ப் பெருமக்களை ஊக்கி, அவர்க்கு ஆக்கம் தருவதற்கு இசை இனிக்கப் பாடுவதே கடன் என்றறிந்த புலவர், அக்கருத்து மேற்கொண்டும், இப்பு:து வழப் புகுந்து, தமிழருக்குப் புதிய உணர்ச்சியும் தமிழுக் குப் புதுப் புத்தணிகளும் தேடித் தந்துளார்.

எதுகை மோனேகளைத் தேடிப் பொருளிழந்து திண்டாடும் பாக்களால் புண்பட்ட தமிழ் மகள், தொட்டதெல்லாம் பொன் ளுக்கும் இவர் பாவன்மை வேதுபெற்று, ஆறுதலும் மகிழ்வும் அடைவாள். பாப்பா பாட்டு, முரசுக் கவிகளால் மிழன்று: பள்ளும், கிளிப்பாட்டும் பயின்று விடுதலை, தாய்நாடு