உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g3 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

பாடி பாஞ்சாலி சபதம் கூறி: கண்ணன் பாட்டு, ஜீவன் முக்திகளில் வீறிய இவர் கவிதை நலம், பண்னேறி விண் அனுயர்ந்து உலாவுவதாகும். சமயம், ஆசாரம், சமுதாய ஒழுக் கம் ஆகியவற்றுள் சம திருஷ்டியும், சர்வாபி அனுதாப கிறை வும் இவர் பாத்தொறும் பரவி விரவும். எனத்தான்ும் தற் காலத் தமிழுலகில் இவரொத்தாரைக் காண்பதரிது : மிக்கார் இலராவர்.

13. முட்டை அளவு தான்ியம்* (மொ. அ. துரையரங்களுர், M. O. 1.)

ஒரு நாள் சில சிறுவர், உலர்ந்த கழனி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு வெடிப்பில் தான்ியம் போன்ற ஒன்றை அவர்கள் கண்டெடுத்தார்கள். அதன் நடுவில் பள்ள மாய் ஒரு கோடு இருந்தது. அந்தப்பொருள் ஒரு கோழி முட்டை அளவு பெரியதாய் இருந்தது. அவர்களுக்கு அஃது இன்ன தென்பது புரியவில்லை. அவ்வழியே வந்த ஒரு வழிப்போக்கன் அதைக் கண்டான். அதைப்பார்க்க அவனுக்கும் மிக வியப்பாய் இருந்தது. எனவே, குழந்தைகளிடம் காலணுக் கொடுத்து, அதை அவன் வாங்கிக்கொண்டான். வாங்கிக்கொண்டவன், அதை அரசனிடம் கொண்டு போய், விளுேதமான பொருள் களுள் ஒன்ருக கல்விலைக்கு விற்றுவிட்டான்.

அந்தப்பொருள் இன்னது என்பது அரசனுக்குப் புரிய வில்லே. தன் காட்டிலிருந்த அறிவாளர் எல்லாரையும் அரசன் வரவழைத்து, அதை இன்னதென்று அறிந்து கூறுமாறு அவர்களிடம் கொடுத்தான்், அநிஞர் யாவரும் அஃது யாதாயிருக்கலாமென்று பல வகையாலும் ஆராய்ந்து பார்த்த னர். ஆனால், அவர்களுக்கும் விளங்கவில்லை. அவர்களது ஆராய்ச்சிக்கென அமைத்த அறையின் சன்னல் ஓரத்தில் அது கிடந்தது. ஒரு நாள் அந்த அறைக்குள் தற்செயலாக ஒரு பெட்டைக்கோழி புகுந்து, அந்தப் பொருளைத் தன் அலகால் குத்தி ஒரு துளே செய்தது. அதைக் கண்டதும் அந்த அறிஞர் கள், அஃது ஒரு தான்ிய மணியாய் இருக்க வேண்டும் என்று

  • இது ருஷ்ய நாட்டு அறிஞர் தால்ஸ்தாய் என்பவர் எழுதிய கதையைத் தழுவி எழுதப்பட்டது.