உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முட்டை அளவு தான்ியம் 9%

முடிவு செய்துகொண்டு, அரசனிடம் சென்று, இது ஒரு தான்ியமணி, என்றார்கள்.

அது கேட்டதும் அரசன் அளவில்லாத வியப்படைக்து, எப்போது எங்கே அப்படிப்பட்ட தான்ியம் விளேக் திருக்க லாம் என்பதைக் கண்டுபிடித்துக் கூறுமாறு அவர்களேயே கேட்டான். அந்த அறிவாளிகள் மறுபடியும் அது குறித்து ஆராய்ந்தார்கள் ; தாங்கள் பயின்ற நூல்களையெல்லாம் புரட் டிப் புரட்டிப் பார்த்தார்கள். ஆனால், அதைப்பற்றி, அவற்ருல், அவர்கள் ஒன்றுமே அறிய முடியவில்லை. ஆகவே, அவர்கள் அர சனிடம்வந்து, அரசரே, உங்களுக்கு காங்கள் எந்தவகையாலும் தெளிவான விடை கூற முடியாது. காங்கள் பயின்ற புத்தகங் களில் அது பற்றிய ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை. உழவர்களே யெல்லாம் அழைத்துக் கேட்டால், ஒரு வேளை உண்மை உணர லாம். ஒரு வேளை அவர்கள் தங்கள் தந்தைமார்களிடமிருந்து எப்பொழுது, எங்கே அவ்வளவு பெரிய தான்ியம் விளேய லாயிற்று என்பதை அறிந்திருக்கலாம்,' என்று சொல்லி முடித்தார்கள்.

அது கேட்ட அரசன், வயது முதிர்ந்த ஓர் உழவனே அழைத்து வரும்படி சொன்னன். கிராமத்தார்கள், அவன் கட்டளேப்படியே ஒருவனே அழைத்து வந்தார்கள். அவன் வயது முதிர்ச்சியால் உடல் வளைந்திருந்தான்்; அவன் தலே முடி யும் தாடியும் கரைத்திருந்தன ; உடலும் வெளுத்திருந்தது : வாயில் பற்களில்க்ல. அவன் இரு தடிகளை ஊன்றிக்கொண்டு. தள்ளாடித் தள்ளாடி நடந்து, அரசன் முன் வந்து கின்ருன்.

அரசன், அந்தத் தான்ிய மணியை அவனிடம் காட்டின்ை. கிழவல்ை அதை கன் ருகப் பார்க்க முடியவில்லை; எனினும், அவன் அதைத் தன் கையில் எடுத்துத் தடவிப்பார்த்தான்். சிறிது நேரம் பொறுத்து, அரசன், "கிழவா, இப்படிப்பட்ட தான்ியம் எங்கே விளைந்தது ? நீ எப்போதாவது இத்தகைய தான்ியத்தை விலக்கு வாங்கியிருக்கிருயா? அல்லது உன்னு டைய வயல்களில் பயிரிட்டிருக்கிருயா?” என்று கேட்டான்.

கிழவனுக்குக் காதும் சரியாகக் கேட்கவில்லை. அரசன் கேட்டதைப் புரிந்துகொள்வதற்கே அவனுக்கு நெடுநேரம்