உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னஞ் சிறு பெண் "அவள் சின்னஞ் சிறு பெண் தான்், அங்கியனே!"

இவ் வார்த்தைகளே நான் நினைத்துப் பார்க்கிற போதெல்லாம், வயதாகிச் சோர்ந்து போன இரண்டு ஜோடிக் கண்கள் ஆண்டுகள் பலவற்றையும் கடந்து என்னே நோக்கிச் சிரிக்கின்றன; அன்பும் இரக்கமும் நிறைந்த மென்மையான இனிய புன்சிரிப்புச் சிரிக்கின்றன. கரகரக்கும் இரு குரல்கள் ஒரே தன்மையான தொனியுடன் "சின்னஞ் சிறு பெண்தான்்' என்று என் மனசில் பதியும் படி பேசுவதையும் நான் கேட்கிறேன்.

இந்த கினேவுச் சித்திரத்தினுல் நான் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெறுகிறேன். எனது தாயகத்தின்-மிகுந்த பரப்பும் துயரமும் பெற்றுள்ள பூமியின் - வளைந்து நெளியும் ரஸ்தாக்களில் நான் நாடோடியாக அலைந்த பத்து மாத காலத்தின் கினேவுகளில் எல்லாம் மிகவும் சிறந்தது அது தான்். - -

ஸாடன்ஸ்க் எனும் இடத்திலிருந்து வோரோனெஷ் என்கிற ஊருக்குச் செல்லும் பாதையில் இரண்டு யாத்ரி கர்களே கான் கடந்து செல்ல நேர்ந்தது. கிழவன் ஒருவன்;