உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்த்துறவு 蟹星敦

அடைக்கலப் பொருள்கள் என்ற கினேவினர் போலும் ! தம் மையே பிறருடைமை என்ற துறவிற்கு வந்த ஆண்டகை, இவற்றைத் தமவாகக் கருதுஞ் சிறு செல்வரோ தெரிந்து கொண்டேன். அம்பிற் பெயர் பொறியாத காரணம் அறிந்து கொண்டேன். தம் பெயரை மறத்தினும் அறத்தினும் வெளிப் படுத்த விரும்பாத மறையோரிவர். பெயரும் காடுங் கேட்ட தும், காங்கள் துணுக்குறிப் பின் வாங்கினரே அஃது இவர்க்கு ஒக்கும். போரில் நெடுமொழி கூறப் பின் வாங்காப் பொருகர், புகழ் கேட்க காணிப் பின் வாங்கல் ஒக்கும். கடமாடத் தெரிந்த பிள்ளையை யாரே எடுத்துப் பாராட்டுவர் ! தன் புகழ் பரப்பு வதைத் தனது தொழிலாகவும் கடகைவும் கொண்டுவிட்டா னுக்குத் தணேயாக யாரும் வாரார்; துணை வெண்டுவதுமின்று, கைப் பிள்ளேயை முத்தி ஆரத்தழுவி அணைத்துச் செல்ல எல்லா ருங் காதலிப்பது போலத் தன்னேப் புகழாதான்் புகழே ஞாலத் துப் பலரால் சொல்லப்படுமன்ருே? ஆதலின், இத்தோன்றலின் புகழை மண் தேயப் பரப்புவதே நமது பிறப்பின் தொழிலாம். இப்பெருமகளுர் பெயரை யாழிற் பண் படுத்துவதே நம் கல்வி யின் பயன்.

வெளியன் : பெயர் தெரிந்தாலும் போதும். நாடு இது வெனத் தெரிந்தாலும் போதும். இவற்றை ஏன் உடனே கேட்டீர்கள் கேளாதிருந்தால் இவண் கெடிது தங்கியிருப்பார், கேட்டதால், கொடைஞர் கள்வன் போல மறைந்துவிட்டனர். சிறிது போழ்திருந்தாரேல், நாமும் இசை பாடியிருப்போம்: அவரும் பண்ணில் மயங்கியிருப்பர். பின்னர்ப் பெயரும் காடுங் கேட்டக்காற் சொல்லியுமிருப்பர்.

பண்ணன் : அதனை முன்னர்த் தெரிந்துதான்் புறப்பட் டுப் போயினர் போலும் !

வன்பரணர்: தம்மைப்பற்றிய முத்தமிழையும் முனிய வர்காண் அவர் : என்ருலும், முத்தமிழ் இத்தகையோரைப் பற்ருமலிருக்குமா ? பண்ணிசைத்துக் கைம்மாறு காட்டுவர் என்று கருதிச் சென்ற அவர் புகழே புகழ் தம் புகழ் தம் முன் னர்க் கூறக் கேளா அவர் காணமே காணம் செய்ங்கன்றி எனத் துணையும் எண்ணு அவர் கொடையே கொடை !