உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

(அப்பொழுது வில்லேங்கிய கையினராய்ச் சிலர் விரைந்து கடந்துகொண்டே, எம்மரசர் இவ்வழியாகச் சென்றதைக் கண்டதுண்டோ ? என்று வினவுகின்றனர்.)

வன்பரணர் : (விரைந்து) அவ்வள்ளலின் புகழ்ப்பெயர் யாதோ ே

வந்தவர்கள் : (ஏளனமாக) அவர் பெயரை அறியா திருக்கின்ற உம் பெயர் என்னவோ ?

வெளியன்: (சிரித்துக்கொண்டு) இசையுலகிற் பெயர் போகிய வன்பரணர் என்றிவரை அறியாத உமது பெயர் என்னவோ ?

மூவன் : (பரணர் மார்பின் ஆரத்தையுங் கைக்கடகத் தையுங் காட்டி) இக்கலன்கள் அவர் கையால் கழற்றி இவருக்கு எம் மனமார அணியப்பட்டவை.

வந்தவர்கள் : இவையுங் தருவார். இக்காடு கடந்து உதுக்காண் தோன்றும் கொல்லி மலே காட்டிற்கு விேர் வருக, எல்லாங் தருவார்.

வன்பரணர் : (மகிழ்ந்து) உண்மை உணர்த்திய நீங்கள் யாரோ? உங்கட்கு என்ன கைம்மாறு செய்வோம (என்று பாடத் தொடங்குகிருர்).

வந்தவர்கள் : நாங்கள் அவரைப் பின் தொடர்பவர் கள். அவர் சென்ற வழி காட்டிய உங்கட்கு.........(ஒருவன் மோதிரத்தைக் கழற்றி அவர் விரற்கண் போடுகிருன். வந்த வர் எல்லாரும் விரைந்து புறப்பட்டுவிடுகின்றனர். பாணர்கள் கொல்லி மலேயையும் ஓரியையும் பாடிக்கொண்டு அம்பையும் எடுத்துக்கொண்டு வழி கடக்கின்றனர்.)

உடைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங் கொடைமை யிலாத குணமே :-கொடைமை

உடையான் தொகுத்த துலகமே யாக உடையான் இரப்பவனென் ருேது.