உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. எல்லோரா

(R. S. உருக்குமிணி, M.A.)

இராட்டிரகூட வமிசத்தைச் சார்ந்த முதலாம் கிருஷ்ணன் என் பான், தக்கிணபதத்தில் கெடுங்காலமாக ஆற்றல் பெற்றுச் செங்கோல் செலுத்திய சளுக்கியரைக் கி பி. 757-ஆம் ஆண்டில் போரி லே புறங்கண்டு, வெற்றி மாலே புனேக்தான்் தக்காணத் தில் இராட் டிரகூடப் பேரரசை நிறுவிய புகழுடைய இம் மன்னன், தான்் பெற்ற வெற்றியைக் கொண்டாடக் கருதினன். இவன் தன் குல தெய்வமாகிய சிவபெருமானுக்கு ஆற்றுக் திருப்பணியாகவும் தன் வெற்றிக்கு அறிகுறியாகவும் மிகப் பெரிய கோவில் ஒன்றை அமைக்க வேண்டுமெனக் கருதினன். இதன்பொருட்டு ஆராய்வதற்காக அமைச்சரோடும் அந்தண ரோடும் அத்தாணி மண்டபத்திற்புகுந்து அரியணையில் அமர்க் தான்.

இராட்டிரகூடர்களுக்கு அரசனை கிருஷ்ண பூபதிக்கு * அகால வர்ஷன், சுபதுங்கன் என்பன போன்ற பல விருதப் பெயர்கள் வழங்கி வந்தன. அரசன் அமைச்சரோடும் அந்தனரோடும் ஆலோசனை செய்த பொழுது ஆங்கு இருந்தவ ரெல்லாம் ஒரே மனமாகக் கைலே மலே போன்ற ஒரு கோயிலே ஆக்குதலே சாலச் சிறந்தது என உரைக்கலாயினர். கைலேமலை போன்றொரு கோயிலக் கட்டுதல் மன்னவர்க்கு எளிதாமோ? அது விண்ணவர்க்குமாகாத செயலன்ருே ' என்னும் பேச்சுக் கள் மன்னனது அவையிலே எழுந்தன.

கி. பி. எட்டாம் நூற்ருண்டு சமயச் சண்டைகள் தொடங் கிய காலமாகையால், பாரத நாடெங்கும் சமயகுரவர்கள் தத் தம் சமயத்தைச் சார்ந்தவர்களின் தொகையைப் பெருக்க அல் லும் பகலும் தொண்டாற்றித் திரிந்தனர். அங்காள் தந்தை வைணவ சமயத்தைச் சார்ந்தால், மைந்தன் சைவ சம யத்தை ஆதரித்த காலமாய் இருந்தது. அக்காலத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற அரசன், தன் வெற்றிக்கெல்லாம் தோன்ருத் துணைவராய் இருந்தவர் சிவபெருமானே எனக் கருதில்ை, கோனேக்கி வாழுங் குடிகளனைவரும் சைவ நெறி யைச் சாராது இருப்பரோ? அரசனெவ்வழிக் குடிகளவ்வழி பன்ருே :

II—9