உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சின்னஞ் சிறு பெண்

எப்படி அம்மா கற்றுக் கொண்டாய்?’ என்று கேட்டால், எல்லாம் புத்தகங்களில் இருக்கின்றன என்று தான்் அவள் சொல்லுவாள். அதை எண்ணிப்பாரேன்! இருங் தாலும், அவள் ஏன் அவ்வளவு அக்கறை காட்ட வேண் டும்? அவள் கல்யாணம் செய்து கொண்டு சீமாட்டியாகவே வாழ்ந்திருக்க வேண்டும். அதற்கு மாருக அவர்கள் அவளே இங்கே அனுப்பி விட்டார்கள். அதனுல் அவள் செத்துப் போனுள்.”

"ஒவ்வொருவருக்கும் அவள் பாடம் சொல்லிக் கொடுப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. இவ் வளவு போல இருந்த ஒருத்தி மிகவும் கர்ம சிரத்தையாக எல்லோருக்கும் உபதேசித்தாளே. நீ இதைச் செய்யக் கூடாது நீ அதைச் செய்யக் கூடாது.-”

"ஒ, அவளிடம் படிப்பு இருந்தது. உண்மையாகவே அவள் படித்தவள் தான்். ஒவ்வொன்றைப் பற்றியும், ஒவ்வொருவரைப் பற்றியும் அவள் எவ்வளவு கவலைப் பட்டாள் யாருக்காவது சீக்கு வந்தது என்றால், அவனைக் குணப்படுத்த அவள் உடனடியாக ஓடுவாள். யாராவது ஒருவருக்கு-’

"அவள் சாகிற சமயத்தில் அவளுடைய மனம் எங்கோ அலைந்து திரிந்தது. 'அம்மா - அம்மா' என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ரொம்பவும் துயரத்தோடு சொன்னுள். காங்கள் பாதிரியாருக்கு ஆள் அனுப்பினேம். அவர் அவளே மீட்டு எங்களிடமே தந்து விடுவார். என்று நினைத்தோம். ஆனல் அவர் வருகிற வரை அவள் காத் திருக்கவில்லை. எங்கள் கண்மணி எங்களை விட்டுப்பிரிந்து போய் விட்டாள்.' - - கிழவியின் முகத்தில் கண்ணிர் பெருகி ஓடியது. அக் கண்ணிர் முழுவதும் எனக்காகவே சிந்தப்படுவது போல்